»   »  ஒரே நேரத்தில் ஒரு குடும்பமே ரீமேக்கில் நடிப்பதைப் பார்த்திருக்கீங்களா?

ஒரே நேரத்தில் ஒரு குடும்பமே ரீமேக்கில் நடிப்பதைப் பார்த்திருக்கீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 முக்கிய நடிகர்கள், ரீமேக் படங்களில், அதிலும் தமிழ் ரீமேக் படத்தில் நடித்து வருவதை கேள்விப்பட்டுள்ளீர்களா.. அது சிரஞ்சீவி குடும்பத்தில் தற்போது நடந்து கொண்டுள்ளது.

அதில் இரண்டு படங்கள் விஜய், அஜீத் நடித்தவை. இன்னொரு படம் ஜெயம் ரவி நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம்.

இப்படி மூன்று முக்கிய ஸ்டார்களும் ஒரே நேரத்தில் தமிழில் ஹிட்டடித்த சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக்கில் நடித்து வருவதை ஆந்திர ரசிகர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.

கத்தி ரீமேக்...

கத்தி ரீமேக்...

விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படம், 150வது படம், அவரது அரசியல் சரிவுக்குப் பின்னர் நடிக்கும் படம் என பல பெருமைகளை உள்ளடக்கியதாக உருவாகி வருகிறது இப்படம்.

கத்திலன்டோடு...

கத்திலன்டோடு...

இப்படத்தை தமிழைப் போல தெலுங்கிலும் மிகப் பெரிய ஹிட்டாக்கும் வகையில் படக் குழுவினர் இரவு பகல் பாராமல் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனராம். இப்படத்திற்கு தெலுங்கில் கத்திலன்டோடு என்று பெயரிட்டுள்ளனர்.

என்னை அறிந்தால்...

என்னை அறிந்தால்...

அதேபோல சிரஞ்சீவியன் தம்பி பவன் கல்யாண் இன்னொரு தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அது அஜீத் நடித்து சூப்பர் ஹிட்டான என்னை அறிந்தால். இப்படமும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றார் போல சில மாற்றங்களுடன் தயாராகி வருகிறது.

தனி ஒருவன்...

தனி ஒருவன்...

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவும் ஒரு தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அது தனி ஒருவன். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடித்து மெகா ஹிட்டான படம் இது. இப்படம்தான் தெலுங்கில் ராம்சரண் தேஜாவின் நடிப்பில் ரீமேக்காகி வருகிறது.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

இப்படி தெலுங்குத் திரையுலகின் மும்மூர்த்திகள் மூவரும் ஒரே நேரத்தில் தமிழ் ரீமேக்கில் நடித்து வருவதை தெலுங்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த 3 படங்களும் ஹிட்டானால் மேலும் பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்து தெலுங்கு பேச ரெடியாகும் என்பதால் தமிழ்த் திரையுலகினரும் இதை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

English summary
The Telugu Actor and politician Chiranjeevi, his son Ram saran and brother Pawan kalyan are doing Tamil remakes in Telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil