Don't Miss!
- News
பணம் வீணாகக் கூடாது..பட்ஜெட்டுக்கு முன் விரைவாக முடிங்க..அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
- Finance
Mukesh Ambani: மீண்டும் முதல் இடம்.. ஒரு வருட கௌதம் அதானி ஆதிக்கம் முடிந்தது.. 16வது இடம்..!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Technology
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காட்ஃபாதர் பாக்ஸ் ஆபிஸ்: 100 கோடியை நெருங்கிய வசூல்… நிம்மதி பெருமூச்சு விட்ட சிரஞ்சீவி
ஐதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மோகன்ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சல்மான் கான், நயன்தாரா முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர்.
காட்ஃபாதர் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
GodFather Review: சிரஞ்சீவி, சல்மான் கானின் மாஸ் ரகளை.. காட்ஃபாதர் விமர்சனம் இதோ!

சிரஞ்சீவியின் காட்ஃபாதர்
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் கடைசியாக 'ஆச்சார்யா' திரைப்படம் வெளியானது. சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் அதலபாதாளத்தில் விழந்தது. இந்நிலையில், தற்போது வெளியான 'காட்ஃபாதர்' படம் சிரஞ்சீவிக்கு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளது. மோகன் ராஜா இயக்கியுள்ள இத்திரைப்படம் மலையாளத்தில் வெற்றிப் பெற்ற 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது. மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' 200 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியிருந்தது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான்
பிருத்விராஜ் இயக்கிய முதல் படமான லூசிபரில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொலிட்டிக்கர் திரில்லர் ஜானரில் உருவான இப்படத்தில், மோகன்லால் கேங்ஸ்டராகவும் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார். மலையாளத்தை போலவே தெலுங்கிலும் அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது காட்ஃபாதர். மோகன்லால் கேரக்டரில், சிரஞ்சீவியும், பிருத்விராஜ் கேரக்டரில் சல்மான் கானும் நடித்துள்ளனர். சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருப்பது, தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்.பி. செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ், பல வருடங்களுக்குப் பிறகு 'காட்ஃபாதர்' படத்தை தயாரித்துள்ளது. அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான காட்ஃபாதர், முதல் நாளில் 38 கோடி வசூல் செய்திருந்தது. தசரா விடுமுறையை முன்னிட்டு வெளியானதால், அடுத்த இரண்டு நாட்களிலும் காட்ஃபாதர் கலெக்ஷன் தரமாக அமைந்துள்ளது. மேலும், முதல் இரண்டு நாட்களில் 69 கோடி ரூயாய் வசூலாகியுள்ளதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

100 கோடியை நெருங்கியது
இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்றும் காட்ஃபாதர் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியுள்ளது. 3 நாட்களில் 80 கோடி ரூபாய் வரை கடந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இன்றும் நாளையும் சேர்த்து முதல் வாரத்திற்குள் 100 கோடியை கடந்துவிடும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிரஞ்சீவிக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ள காட்ஃபாதர், பாக்ஸ் ஆபிஸில் இன்னும் தரமான சம்பவங்கள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிரஞ்சீயும் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.