நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சிரஞ்சீவியின் காட்ஃபாதர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

ஐதராபாத்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது காட்ஃபாதர் படத்தில் நடித்து வருகிறார்.

மோகன் ராஜா இயக்கிவரும் இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான், நயன்தாரா நடித்து வருகின்றனர்.

காட்ஃபாதர் படத்தில் நயன்தாராவின் கேரக்டரை அறிமுகம் செய்துள்ள படக்குழு, ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது.

லூசிபர் இப்போது காட்ஃபாதர்

லூசிபர் இப்போது காட்ஃபாதர்

மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ் முதன்முறையாக இயக்கிய திரைப்படம் 'லூசிபர்.' மோகன்லால் கேங்ஸ்டராக நடித்த இத்திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது. இத்திரைப்படம் தற்போது தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற டைட்டிலில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மோகன் ராஜா இயக்கிவரும் இப்படத்தில், மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவியும், பிருத்விராஜ் ரோலில் சல்மான் கானும் நடித்துள்ளனர்.

லேடி சூப்பர் ஸ்டாரின் ஃபர்ஸ்ட் லுக்

லேடி சூப்பர் ஸ்டாரின் ஃபர்ஸ்ட் லுக்

மலையாளத்தில் முதலமைச்சரின் மகளாக ப்ரியதர்ஷினி ராமதாஸ் என்ற பாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். தெலுங்கில் அதே கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சத்யப்ரியா ஜெய்தேவ் என்ற கேரக்டரில் நயன்தாரா நடிப்பதாகவும், அந்த தோற்றத்தில் நயன்தாராவின் அல்டிமேட்டான போஸ்டர் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விரைவில் காட்ஃபாதர் முதல் பாடல்

விரைவில் காட்ஃபாதர் முதல் பாடல்

நயன்தாராவின் சத்யப்ரியா ஜெய்தேவ் கேரக்டரை அறிமுகம் செய்துள்ள படக்குழு, அப்படியே காட்ஃபாதர் படத்தின் முதல் பாடல் விரைவில் அப்டேட் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது. காட்ஃபாதர் படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், சீக்கிரமே ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகவுள்ளது சிரஞ்சீவி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் தமன் தரமான சம்பவம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காட்ஃபாதர் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

காட்ஃபாதர் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து காட்ஃபாதர் படம் அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. காட்ஃபாதரின் ஒரிஜினல் வெர்ஷனான 'லூசிபர்' திரைப்படம், 200 கோடிக்கும் மேல் வசூலித்து மல்லுவுட் பாக்ஸ் ஆபிஸை மிரட்டியெடுத்தது. அதனால், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X