»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தெலுங்கு சூப்பர் ஸடார் சிரஞ்சீவிக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆந்திர பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. இதற்கு மாணவர்களும், அவரது ரசிகர்களாக இருக்கும் மாணவர்களும் கூட கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். மேலும் பேராசிரியர்கள் மத்தியிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் தான் டாக்டர் பட்டம் சர்வச சாதாரணமாகத் தரப்பட்டு வருகிறது. இப்போது ஆந்திராவுக்கும் இந்தடிரண்ட் பரவியுள்ளது.

விசாகப்பட்டிணத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகம், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளதால் சிரஞ்சீவிக்குகெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.

இதையடுத்து டாக்டர் பட்டத்தைப் பெற வேண்டாம் என மாணவர் சங்கங்களும், ரசிகர்களும் கூட சிரஞ்சீவிக்குகடிதங்களை எழுதி வருகின்றன். ஆந்திர பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பும் சிரஞ்சீவிக்கு டாக்டர்பட்டம் கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடும் எதிர்ப்பு நிலவுவதால்,சிரஞ்சீவி டாக்டர் பட்டத்தை பெற முன் வருவாரா இல்லையா என்று தெரியவில்லை.இப்போது அவர் படப்பிடிப்புக்காக வெளி நாட்டில் உள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil