Just In
- 2 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 11 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 48 min ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
- 57 min ago
குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1
Don't Miss!
- Sports
கட்டிப்பிடித்து கொண்டாடிய சாஸ்திரி.. கண்ணீரில் சிராஜ்.. ஓடி வந்த நடராஜன்..கொடி நாட்டிய இந்தியா!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- News
சசிகலா அதிமுகவிலேயே இல்லை..சிறையில் இருந்து வந்தாலும் 100% இணைக்க வாய்ப்பில்லை - முதல்வர் உறுதி
- Lifestyle
இந்த அறிகுறிகள் உள்ள மனைவியிடம் கணவன் ஜாக்கிரதையா இருக்கணுமாம்...இல்லனா பிரச்சனைதான்...!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சித்ராவின் முகத்தில் மட்டுமல்ல.. மார்பிலும் அடிப்பட்டு காயங்கள் இருந்தன.. தாய் மாமா பகீர் தகவல்!
சென்னை: மரணமடைந்த நடிகை சித்ராவின் மார்பிலும் காயங்கள் இருந்ததாக அவரது தாய் மாமா கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9ஆம் தேதி சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது கணவரான ஹேம்நாத் உடன் இருந்தபோதே அவரை வெளியே அனுப்பிவிட்டு சித்ரா ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்துகொண்ட சித்ரா.. ஆசையாக வாங்கிய அந்த நைட்டி.. 'கால்ஸ்' இயக்குனர் உருக்கம்!

கணவரிடம் விசாரணை
சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் தற்கொலைதானா என்ற சந்தேகத்தை எழுப்பியது. இதனை தொடர்ந்து சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த அவரது கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்
மேலும் ஹோட்டல் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சித்ராவுடன் படப்பிடிப்பில் இருந்த சக நடிகர்களிடமும் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை
சித்ராவுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவர் இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் ஆடிஓ திவ்ய ஸ்ரீ நாளை விசாரணையை தொடங்க உள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கை
சித்ராவின் உடல் வியாழக்கிழமை பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் சித்ராவின் முகத்தில் இருந்த காயங்கள் மற்றும் நகக்கீரல்கள் அவருடையதுதான் என்றும் கூறப்பட்டது.

அடித்துக் கொன்றுவிட்டார்
ஏற்கனவே சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத்துதான அடித்துக்கொன்று விட்டார் என அவரது தாயார் விஜயா குற்றம் சாட்டி வந்தார். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தன்னுடைய மகள் கோழை இல்லை என்றும் கூறினார்.

தாய் மாமா பகீர்
இந்நிலையில் சித்ராவின் தாய் மாமாவான சுரேஷ், அவரது மரணம் குறித்து பல்வேறு திடுக் தகவல்களை கூறியுள்ளார். அதாவது சித்ரா சேலையில் தூக்குப் போட்டிருந்தால் அவரது கழுத்தில் காயம் இருக்கணுமே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்பில் காயம்
மேலும் கழுத்தில் எந்த காயமும் இல்லாமல் கன்னம் மற்றும் தாடை, நெற்றி உள்ளிட்ட இடங்களிலும் அடிப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சித்ராவின் மார்பிலேயும் அடிபட்டுள்ளதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

சத்தியமாக மர்மம் உள்ளது
மேலும் தங்களின் பொண்ணு தைரியமானவர் என்றும் சித்துவின் மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என்றும் சத்தியம் செய்துள்ளார். மேலும் சித்ராவின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்றும் கதறியுள்ளார் அவரது தாய் மாமாவான சுரேஷ்.