ரஜினி காலில் விழுந்து வணங்கிய ஐஸ்வர்யா ராய், சியான் விக்ரம்.. இதுதான் ரியல் வெறித்தனம்!

சென்னை: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டது சோஷியல் மீடியாவில் டிரெண்டானது.

ரஜினிகாந்த் அரங்கிற்குள் நுழைந்த உடனே இயக்குநர் மணிரத்னத்தை கட்டியணைத்து பேசினார்.

உடனடியாக அவர் அருகே வந்த ஐஸ்வர்யா ராய் அவரது காலில் விழுந்து வணங்கினார். மேலும், சியான் விக்ரமும் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற வீடியோ டிரெண்டாகி வருகிறது.

எழுந்து நின்ற அரங்கம்

எழுந்து நின்ற அரங்கம்

ரஜினிகாந்த் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அரங்கிற்குள் நுழைந்ததுமே ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது. மேலும், இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்து கட்டி அணைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த்.

காலில் விழுந்த ஐஸ்வர்யா ராய்

காலில் விழுந்த ஐஸ்வர்யா ராய்

நடிகர் ரஜினிகாந்த் உடன் எந்திரன் படத்தில் இணைந்து ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்தை பார்த்ததுமே அருகே வந்து அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார். பின்னர் ஐஸ்வர்யா ராயை ஹக் செய்த ரஜினிகாந்த் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்தார்.

விக்ரமும் காலில் விழுந்தார்

விக்ரமும் காலில் விழுந்தார்

ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரமும் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெறுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஐஸ்வர்யா ராய் மற்றும் சியான் விக்ரம் இருவரும் ஒருவர் பின் ஒருவராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்ற வீடியோக்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிகாந்த் பேச்சு

பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என கேட்டேன். ஆனால், அதற்கு மணிரத்னம் கொஞ்சம் கூட சம்மதம் தெரிவிக்கவில்லை என பேசியுள்ளார். ரஜினிகாந்தின் தளபதி ஏவி மற்றும் கமலின் நாயகன் ஏவி பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடையச் செய்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X