வீடு திரும்பினார் விக்ரம்.. எல்லாமே ஆல் ரைட்.. கோப்ரா ஆடியோ லாஞ்சில் ரசிகர்களை சந்திக்கிறார்!

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் கடந்த வியாழக்கிழமை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்கிற தகவல் நேற்று காட்டுத்தீ போல பரவியது. மேலும், விக்ரமுக்கு மாரடைப்பு என்றும் வதந்திகள் கிளம்பின.

உடனடியாக விக்ரமின் மேனேஜர், அவரது மகன் துருவ் விக்ரம் மற்றும் காவேரி மருத்துவமனை என அனைவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

திடீர் உடல்நலக்குறைவு

திடீர் உடல்நலக்குறைவு

இந்திய சினிமாவிலேயே சியான் விக்ரமை போல திறமையான நடிகர்கள் வெகு சிலர் தான் உள்ளனர். ஒவ்வொரு படத்துக்கும் தனது உடம்பையும், உயிரையும் உருக்கி நடித்து வருகிறார். ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேல் உடன் சியான் விக்ரமை ரசிகர்கள் கம்பேர் செய்வது உண்டு. இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்கிற செய்தி ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாரடைப்பு வதந்தி

மாரடைப்பு வதந்தி

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக காட்டுத்தீ போல வதந்திகள் பரவின. ஆனால், அது முற்றிலும் வதந்தி தான் தேவையில்லாமல் யாரும் பரப்ப வேண்டாம் என நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், விக்ரமின் மேனேஜர் மற்றும் காவேரி மருத்துவமனை மருத்துவ அறிக்கையையே வெளியிட்டு விக்ரம் ரசிகர்களை நிம்மதியடைய செய்தது.

நெஞ்சுவலி

நெஞ்சுவலி

கடந்த வியாழக்கிழமை நடிகர் விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் உடனடியாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக விக்ரமை அனுமதித்தனர். அதுகுறித்த தகவல்கள் ரகசியமாக காக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை கசிய ஆரம்பித்து விட்டது. லேசான நெஞ்சுவலி தான் ஒரு நாளில் விக்ரம் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என துருவ் விக்ரமும் தனது அறிவிப்பில் தெரிவித்து இருந்தார்.

வீடு திரும்பினார் விக்ரம்

வீடு திரும்பினார் விக்ரம்

இந்நிலையில், இன்று மதியம் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் நன்றாக ஓய்வெடுத்து விட்டு தனது வீட்டுக்கு திரும்பி உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. எனக்கு ஒன்றுமில்லை, ஏன் மருத்துவமனைக்கு எல்லாம் கொண்டு வந்தீங்கன்னு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே அடம்பிடித்தார் விக்ரம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டீசர் வெளியீட்டு விழாவில் மிஸ்ஸிங்

டீசர் வெளியீட்டு விழாவில் மிஸ்ஸிங்

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஏ.ஆர். ரஹ்மான், சரத்குமார், மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த விக்ரம் பங்கேற்க முடியாமல் போனது அவரது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்தது.

கோப்ரா ஆடியோ லாஞ்ச்

கோப்ரா ஆடியோ லாஞ்ச்

வரும் திங்கட்கிழமை பீனிக்ஸ் மாலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் நிச்சயம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் லைவ் இசை நிகழ்ச்சியும் அங்கே அரங்கேற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சியான் விக்ரமை ரசிகர்கள் காண நிச்சயம் பீனிக்ஸ் மாலுக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X