நான் ஒரு சினிமா பைத்தியம்.. இப்பக்கூட கேவலமா(தாடியோட) இருக்கேன் - விக்ரம் வேறலெவல் பேச்சு!

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Recommended Video

HL: Chiyaan Vikram | தீயாய் பரவும் தகவல்... ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil

திருச்சி ஜோசப் கல்லூரியின் காட்சி தொடர்புகள் துறையில் கோப்ரா திரைப்படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோப்ரா திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர்.

திருச்சி கல்லூரியில் விக்ரம்

திருச்சி கல்லூரியில் விக்ரம்

அதன் பின்பு கல்லூரி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய நடிகர் விக்ரம் பேசுகையில்.., திருச்சி என்றாலே எனக்கு சாமி படம் நியாபகம் தான் வரும். இங்கு சின்ன வயதில் Sports-ல் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். இந்த படம் ஒரு Science Fiction, Emotion கலந்த படம். இந்த படம் இருமுகன் படத்தை தாண்டி "அதுக்கும் மேல இருக்கும்."நல்ல புதவிதமான படமாக இருக்கும்.

ஸ்ரீநிதிக்கு என்ன ரோல்

ஸ்ரீநிதிக்கு என்ன ரோல்

ஒரு வாரத்தில் படம் வெளியாக உள்ளது. மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகி ஸ்ரீநிதி செட்டி உங்களை போல, கல்லூரி மாணவி கதாபாத்திரம் உள்ளது, ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார். நான் கல்லூரிக்கே போகவில்லை. என் அப்பா IAS படிக்க சொன்னார். இந்த கல்லூரி முதல்வர்தான் எனக்கு கல்யாணம் செய்து வைத்தார் என்றார்.

சினிமா பைத்தியம்

சினிமா பைத்தியம்

ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு. சினிமா என்றால் எனக்கு பைத்தியம். இப்பக்கூட கேவலமா(தாடியோட) இருக்கேன், என்னுடைய அடுத்த படத்திற்காக வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என விக்ரம் சிரித்தபடியே பதில் அளித்தார். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கேஜிஎஃப் கதையில் நடிக்க இப்படி தாடி வளர்த்து வருகிறார் விக்ரம்.

கடவுள் கொடுத்த வரம்

கடவுள் கொடுத்த வரம்

ரசிகர்களுக்காக எப்படி இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக நடிக்கிறீர்கள் என மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ரசிகர்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். எனக்காக சிலர் பச்சைக் குத்துகிறார்கள் ஆனால் அவர்களை நான் சந்திக்கக்கூட முடியவில்லை. இதெல்லாம் எனக்கு கடவுள் கொடுத்த வரம்.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை தீர்வல்ல

நீங்கள் எவ்வளவோ சிரமங்களை கடந்து வந்துள்ளீர்கள். ஆனால்,இப்போதுள்ள மாணவர்கள் சின்ன விஷயத்துக்கெல்லாம் தான் கொலை செய்து கொள்கிறார்களே என்ற கேள்விக்க, இந்த Generation அப்படி ஆகிவிட்டது. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதை உறுதியாக செய்ய வேண்டும்.என்னால் நடக்கவே முடியாது, அதை கடந்து நடிக்க ஆரம்பித்தேன். தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்றார்.

பொன்னியின் செல்வன் அப்டேட்

பொன்னியின் செல்வன் அப்டேட்

பொன்னியின் செல்வன் அப்டேட். சொல்லுங்கள் என மாணவர்கள் ஒரே கோரஸாக கேட்க, பொன்னியின் செல்வன் கதை சூப்பராக இருக்கும். அந்த கதையை தாண்டி ஒரு வலிமையான நாவல் வந்தது இல்லை‌. அந்த படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது எனக் கூறினார். மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X