Cobra Box Office Prediction: சியான் விக்ரமின் கோப்ரா முதல் நாளில் இத்தனை கோடி வசூல் செய்யுமா?

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி திரைக்கு வருகிறது.

Recommended Video

Cobra Team Exclusive Interview | Chiyaan Vikram *Interview

7 வித்தியாசமான கெட்டப்புகளில் சியான் விக்ரம் நடித்துள்ள இந்த திரைப்படம் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளில் விக்ரமின் கோப்ரா திரைப்படம் எத்தனை கோடி கலெக்ட் செய்யும் என்கிற கணிப்பை இங்கே காண்போம்..

கோப்ரா பட்ஜெட்

கோப்ரா பட்ஜெட்

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் சியான் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 90 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சென்னை மற்றும் வெளிநாடுகளில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

சியான் விக்ரம் சம்பளம்

சியான் விக்ரம் சம்பளம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள கோப்ரா படத்தில் 7 கெட்டப்புகளில் நடித்துள்ள சியான் விக்ரம் இந்த படத்துக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சாமி ஸ்கொயர் படம் தோல்வி, மகான் ஓடிடி ரிலீஸ் என்பதால் விக்ரமின் மார்க்கெட் இன்னமும் பெரிதாக உயரவில்லை. கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் பேக் டு பேக் வெளியாகி ஹிட் அடித்தால் விக்ரம் தனது சம்பளத்தை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்வான்ஸ் புக்கிங்

அட்வான்ஸ் புக்கிங்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் மட்டுமே கோப்ரா திரைப்படம் வெளியாகிறது. பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படம் உலகளவில் 2000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்த படத்தை பார்க்க இதுவரை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 1.7 கோடி ரூபாய் வரை டிக்கெட் மூலம் அட்வான்ஸ் புக்கிங் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்

சியான் விக்ரமின் திரைப்படம் வெகு நாட்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் நிலையில், முதல் நாளில் வசூல் நல்லாவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால் 15 முதல் 20 கோடி வரை ஒட்டுமொத்தமாக கோப்ரா படத்துக்கு உலகளவில் முதல் நாள் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 நாட்களில் 100 கோடி

5 நாட்களில் 100 கோடி

புதன்கிழமையே விக்ரமின் கோப்ரா படம் வெளியாகும் நிலையில், முதல் வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் படம் எந்தவொரு தங்கு தடையின்றி ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக முதல் வார முடிவில் படத்திற்கு வரும் ரெஸ்பான்ஸை பொறுத்து 100 கோடி வரை படம் கலெக்ட் செய்யும் என கணிக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X