For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தஞ்சை பெரிய கோயிலை ராஜ ராஜ சோழன் எப்படி கட்டினார் தெரியுமா? சிலிர்க்க வைத்த சியான் விக்ரம்!

  |

  சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனின் அண்ணன் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள சியான் விக்ரம் தஞ்சை பெரிய கோயிலை ராஜ ராஜ சோழன் எப்படி கட்டினார் தெரியுமா என ஆங்கிலத்தில் பேசிய பேச்சு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.

  வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

  லாஸ் வேகாஸில் பறக்கும் சோழர்கள் கொடி.. பொன்னியின் செல்வனுக்கு இதை விட பெரிய புரமோஷன் பண்ண முடியாது! லாஸ் வேகாஸில் பறக்கும் சோழர்கள் கொடி.. பொன்னியின் செல்வனுக்கு இதை விட பெரிய புரமோஷன் பண்ண முடியாது!

  புரமோஷனில் விக்ரம்

  புரமோஷனில் விக்ரம்

  சியான் விக்ரம் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவுக்கு வர முடியாத சூழலில் அதன் பின்னர் நடைபெற்ற பல புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். ஹைதராபாத், மும்பை என பொன்னியின் செல்வன் டீமுடன் சென்று சியான் விக்ரம் பேசுவதை கேட்கவே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஃபன் பண்ணி வந்த சியான் விக்ரம் பாலிவுட் ரசிகர்களுக்கும் மற்ற மொழி ரசிகர்களுக்கும் புரியும் வகையில் சோழர்களின் பெருமையை ஆங்கிலத்தில் எடுத்துக் கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

  தஞ்சை பெரிய கோயில் பற்றி

  தஞ்சை பெரிய கோயில் பற்றி

  சாய்ந்து நிற்கும் கோபுரங்களை அதிசயம் என செல்ஃபி எடுத்து வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக சாயாமல் கம்பீரமாக தமிழனின் கட்டடக் கலையால் ஓங்கி நிற்கும் தஞ்சை பெரிய கோயில் எப்படி உருவானது தெரியுமா என ஆங்கிலத்தில் சியான் விக்ரம் கொடுத்துள்ள விளக்கம் ரசிகர்களையும் பிற மொழி பிரபலங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

  கட்டடக் கலையின் பிரம்மாண்டம்

  கட்டடக் கலையின் பிரம்மாண்டம்

  கிரேன் உள்ளிட்ட எந்தவொரு நவீன கருவிகளும் இல்லாமல் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக தமிழன் சாதித்த மிகப்பெரிய கட்டடக் கலையின் பிரம்மாண்டம் தான் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில். 6 கி.மீ., சாரம் (ramp) அமைத்து அத்தனை எடையுள்ள கல்லை கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளனர். யானைகளையும், காளைகளையும், மனிதர்களின் உழைப்பையும் பயன்படுத்தி துல்லியமாக அப்படியொரு கோயிலை ராஜ ராஜ சோழன் கட்டியுள்ளார்.

  ராஜா ராஜ சோழன்

  ராஜா ராஜ சோழன்

  பொன்னியின் செல்வன் எனக் கொண்டாடப்படுவதே ராஜ ராஜ சோழனைத்தான். நீர் மேலாண்மையில் தலை சிறந்து விளங்கிய அரசர் ராஜ ராஜ சோழன். ஏகப்பட்ட அணைகளை கட்டி உள்ளார். மக்களுக்கு இலவச மருத்துவம் உள்ளிட்ட பல சேவைகளை செய்துள்ளார். கடல் வாணிபத்தில் மற்ற நாடுகள் பின் தங்கி இருந்த போதே நாம் கடல் கடந்து பல தீவுகளுக்கும் நாடுகளுக்கும் சென்றுள்ளோம் என பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் சியான் விக்ரம்.

  ராஜ ராஜ சோழனின் அண்ணன்

  ராஜ ராஜ சோழனின் அண்ணன்

  பொன்னியின் செல்வன் கதையில் ராஜ ராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் நடித்துள்ளார். ஜெயம் ரவி அருகே இவர் தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகளையும் தமிழர்களின் சிறப்புகளையும் பற்றி பேசிய நிலையில், ஜெயம் ரவி கட்டி அணைத்து பாராட்டினார்.

  இந்தியாவின் பெருமை

  இந்தியாவின் பெருமை

  நார்த், சவுத் என பிரித்து பேச நான் விரும்பவில்லை. நாம் எல்லோரும் இந்தியர்கள். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிக்கும் முன்னமே நாம் கடல் வாணிபம் செய்துள்ளோம். இது இந்தியாவின் சிறந்த அரசனின் கதை. உண்மையான அரசனின் கதை என பொன்னியின் செல்வன் யார் என்பதை பாலிவுட் ரசிகர்களுக்கு புரியும் படி பேசியுள்ளார் சியான் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்தின் புக்கிங் இன்று முதல் ஓப்பன் ஆகி விட்டது. காலை 4 மணிக்கே ஏகப்பட்ட திரையரங்குகளில் காட்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Chiyaan Vikram talks about how Raja Raja Cholan builts the Great Tanjore Big Temple 1000 years before with man power and intelligence makes fans goosebumps. Vikram speech went like a wild fire in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X