twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோவின் திரைப்பயணம்... மறக்க முடியுமா அந்த துக்ளக்கை!!

    By Shankar
    |

    திரைத் துறையில் சோவின் பங்களிப்பு மேம்போக்காகப் பார்த்தால் பெரிதாகத் தெரியாது.

    எம்ஜிஆரின் திரைப்படங்களில் ஏதோ காமெடி வேடங்கள் செய்தவர், ரஜினியுடன் சில படங்களில் நடித்தவர் என்பதுதான் அவரைப் பற்றிய பாமரப் பார்வை. ஆனால் சோவின் பங்களிப்பு திரைத்துறையில் குறிப்பிடத்தக்கது.

    சோ நடித்துள்ள படங்கள் மட்டும் 200. இவற்றைத் தாண்டி 20 படங்களுக்கு அவர் கதை எழுதியிருக்கிறார். முகமது பின் துக்ளக் என்ற தனது பிரபலமான நாடகத்தை அதே பெயரில் சோ படமாக்க, அது அந்நாட்களில் மிகச் சிறந்த அரசியல் எள்ளல் படமாகத் திகழ்ந்தது. இன்று பார்த்தாலும் ரசிக்கும்படியான ஒரு படம் அது.

    1963-ல் பார் மகளே பார் என்ற படத்தில்தான் ஒரு நடிகராக சோ அறிமுகமானார். தொடர்ந்து நிறைய வாய்ப்புகள், பல படங்களில் நடித்தார்.

    அவற்றில் தேன்மழை, நினைவில் நின்றவள், மனம் ஒரு குரங்கு, அந்தரங்கம், நிறைகுடம், யாத்திரை, தேரோட்டம், காசி யாத்திரை, தங்கப் பதக்கம், நீலகிரி எக்ஸ்பிரஸ், புகுந்த வீடு, வேலும் மயிலும் துணை, மறக்க முடியுமா என ஏகப்பட்ட படங்கள்.

    எம்ஜிஆர் - ஜெயலலிதாவுடன்

    எம்ஜிஆர் - ஜெயலலிதாவுடன்

    எம்ஜிஆருடன் நிறையப் படங்களில் நடித்திருக்கிறார் சோ. எல்லாமே நகைச்சுவை வேடங்கள்தான்.

    ஒளி விளக்கும், கணவன், குமரிக் கோட்டம், மாட்டுக்கார வேலன், எங்கள் தங்கம். தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன், நீரும் நெருப்பும், பெற்றால்தான் பிள்ளையா, சங்கே முழங்கு, ரிக்ஷாக்காரன், தலைவன் போன்ற படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தார் சோ. இவற்றில் பெரும்பாலானவை எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடியாக நடித்தவை.

    ஜெயலலிதா நடித்த 19 படங்களில் சோ நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார்.

    கதை

    கதை

    தேன் மழை, நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், ஆயிரம் பொய், பணம் பத்தும் செய்யும் போன்ற படங்கள் சோ கதை எழுதியவை. இவை அனைத்துமே பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்தவை.

    சிவாஜியுடன்

    சிவாஜியுடன்

    சிவாஜி கணேசனுடன் பார் மகளே பார், கலாட்டா கல்யாணம், அன்பைத் தேடி, தங்கப் பதக்கம், நிறைகுடம் போன்ற படங்களில் நடித்துள்ளா சோ.

    ஜெய்சங்கருடன்

    ஜெய்சங்கருடன்

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்துள்ளார் சோ. சொல்லப்போனால் ஜெய்சங்கருடன்தான் அதிகப் படங்கள்.

    நான் யார் தெரியுமா, நீலகிரி எக்ஸ்பிரஸ், ஆயிரம் பொய், ஆசீர்வாதம், உனக்கும் எனக்கும், வாக்குறுதி, வாயாடி, வந்தாளே மகராசி, பொன்வண்டு, கல்யாணமாம் கல்யாணம், இதயம் பார்க்கிறது, உங்க வீட்டுக் கல்யாணம், பிஞ்சு மனம், சினிமா பைத்தியம், தாய்வீட்டு சீதனம், சொந்தங்கள் வாழ்க, மேயர் மீனாட்சி, அவள் ஒரு அதிசயம், ராசி நல்ல ராசி, சக்க போடு போடு ராஜா, ஜானகி தேடிய ராமன் போன்றவை.

    ரஜினியுடன்

    ரஜினியுடன்

    ரஜினி நடிக்க வந்த ஆரம்ப காலத்திலிருந்தே சோவுடன் நல்ல நட்பு. அந்த நட்பு இருவரின் திரைப்பயணத்திலும் தொடர்ந்தது.

    ரஜினிக்கு பெரும் பெயர் பெற்றுத் தந்த ஆறிலிருந்து அறுபது வரை, அடுத்த வாரிசு, மனிதன், குரு சிஷ்யன், அதிசயப் பிறவி போன்ற படங்களில் சோவுக்கு முக்கிய வேடங்கள் அமைந்தன.

    கமல் ஹாஸனுடன் காதலா காதலா படத்தில் நடித்தார் சோ. மனோரமாவுக்கு ஜோடியாகவே 20 படங்களில் நடித்துள்ளார் சோ.

    இயக்குநராக...

    இயக்குநராக...

    சோ 5 படங்களை இயக்கியுள்ளார்.

    அவை

    முகமது பின் துக்ளக்

    உண்மையே உன் விலை என்ன

    மிஸ்டர் சம்பத்

    யாருக்கும் வெட்கமில்லை

    சம்போ சிவ சம்போ

    முகமது பின் துக்ளக்

    முகமது பின் துக்ளக்

    சோ உருவாக்கி, பல மேடைகளில் புகழ்ப் பெற்ற இந்த நாடகம் பின்னர் திரைப்படமாக உருவானது. படத்தை இயக்கியதோடு துக்ளக் வேடத்திலும் நடித்தார் சோ. இந்தப் படம் சோவின் வாழ்நாள் சாதனைப் படமாக அமைந்தது. படத்தின் வசனங்களில் தெரிந்த அங்கதம், நகைச்சுவை சோவின் திரையுலக வாழ்க்கையின் சிகரமாக அமைந்தது.

    English summary
    Here is the filmography of veteran Cho Ramaswamy who passed away today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X