For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீதர் எப்போதுமே எல்லோருக்கும் பிடித்தமான கலைஞன்

|

சென்னை :ஶ்ரீதர் மாஸ்டர் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடண இயக்குனராக பணியாற்றியுள்ளார் .இவர் பொய் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். சன் டிவி தில்லானா தில்லானா டைட்டில் வின்னர் என்பது அப்போது மிக பெரிய விசயமாக பேசப்பட்டு அனைவரையும் இவர் திரும்பி பார்க்க வைத்தார்.

ஶ்ரீதர் மாஸ்டரை பிடிக்காத நபர்களே சினிமாவில் கிடையாது என்று சொல்லலாம்,ஏனெனில் பிரபு தேவா ,லாரன்ஸ் போல இவரும் பல படங்களில் சிறந்த நடனங்களை கொடுத்தவர் .

சினிமாவில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஸ்ரீதர் ஒரு செல்ல பிள்ளை தான் இன்னமும். ராஜசுந்தரம் மாஸ்டர் நடனம் என்றால் அந்த கூட்டணியில் கண்டிப்பாக ஸ்ரீதர் இருப்பது தான் அவருடைய ஸ்பெஷல் ஹைலைட் .

choreographer sridhar with many celebrities on stage.

இவர் வருடா வருடம் தனது நடனப்பள்ளி மற்றும் நடனகுளு மூலம் ஒருநிகழ்ச்சியை நடத்துவார் .இவரின் ஏ.ஆர்.எஸ் டான்ஸ் அகாடமியில் நூற்றுக்கணக்கான பேர் நடணம் கற்று வருகிறார்கள் அவர்களை வைத்து இந்த வருடம் சென்னையில் உள்ள 'கலைவானர் அறங்கத்தில் ' குரு ஸ்டெப் 3 என்ற நடன நிகழ்ச்சி நேற்று மாலை நவம்பர் 9ஆம் தேதி நடத்தியுள்ளார் .

இந்த நிகழ்ச்சியில் பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் . கலந்து கொண்ட பலரும் நிகழ்ச்சியின் போது ஶ்ரீதர் மாஸ்டர் பற்றி பல விசயங்களை பகிரந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சியை குறிஞ்சி மற்றும் பப்பு தொகுத்து வழங்கினர்.குறிஞ்சி விஜய் டீவியில் சில நாடகங்களில் நடித்தவர் மற்றும் பப்பு பல விஜய் டீவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றியவர்.

choreographer sridhar with many celebrities on stage.

இந்த நிகழ்ச்சியில் சினிமா மற்றும் சீரியலில் தொடரந்து நடித்து வரும் மைனா மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை சந்தோச படுத்தினார் ,நடிகர் பரத் ,நடிகை தன்ஷிகா ,ரோபோ ஷங்கரின் மனைவி மற்றும் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்த 'இந்தரஜா சங்கரும்' கலந்து கொண்டனர்.

மேலும் ஜானி மாஸ்டர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் ,பல நாட்களாக இவரை திரையில் பார்க்க முடியவில்லை ,தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஶ்ரீதர் மாஸ்டருடன் நடனமாடி பலரை உற்சாக பட வைத்தார் .

மேலும் நிகழ்ச்சியில் மாஸ்டர் மகேந்திரன் ,ஷாலு சம்மு கலந்து கொண்டனர், தற்போது ஷாலு சம்மு தான் இன்ஸாடாகிராமின் ஹாட் டாபிக் ,வருத்த படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அனைவராலும் அறியபட்ட இவர் தற்போது சால்சா நடனம் ஆடியும் மாடலிங்கில் ஈடுபட்டும் இன்ஸாடாகிராமில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.மேலும் ஸ்டன்ட் தீனா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஶ்ரீதர் மாஸ்டர் பற்றி பேசினார் .

choreographer sridhar with many celebrities on stage.

ஶ்ரீதர் மாஸ்டர் குழுவினர் அனைவரும் இனைந்து கருப்பு உடையில் ஒரு நடனநிகழ்வை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சிரயத்தில் ஆழ்தினர் .

நிகழ்ச்சியில் பிரபல தயாரிப்பாளர் ஜசரி கனேஷன் மற்றும் பிரபல நடிகையான அம்பிகாவும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பாக மாற்றினார்கள்.

choreographer sridhar with many celebrities on stage.

குரு ஸ்டெப் 3 என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி போல் ஶ்ரீதர் மாஸ்டர் குழுவான ஏ.ஆர்.எஸ் அகாடமி சார்பில் வருடாவருடம் ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது,அதே போல் இந்த வருடமும் கலைவானர் அறங்கத்தில் கோலாகலமாக நிகழ்ச்சி நடைப்பெற்றது. நடனமாடிய குட்டி சுட்டி குழந்தைகளும் ஸ்ரீதர் மாஸ்டருடைய மாணவர்களும், மற்றும் அந்த குழந்தைகளின் பெற்றோரும் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தனர்.

இத்தகைய நடன நிகழ்ச்சிகள் வெறுமென நடனமாக மட்டும் பார்க்காமல் அன்பையும் பாசத்தையும் பரிமாறி கொள்ளும் ஒரு நல்ல தருணமாக மாற்றியது தான் ஸ்ரீதர் மாஸ்டர்க்கு கிடைத்த மிக பெரிய வெற்றி.

English summary
Versatile dancer sridhar conducted a dance event at kalaivaanar arangam with his students and many celebrities was invited to participate . it was a emotional bonding with sridhar master which many filmi personalities mentioned about him and his talents in the field of dance was felicitated.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more