»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆர்.பி. செளத்ரியின் அலுவலகத்திலிருந்து ரூ.6 லட்சம் திருடு போய் விட்டதாகபுகார் கொடுக்கப்பட்டுள்ளது.

"புது வசந்தம்", "சொல்லாமலே", "நாட்டாமை" உள்பட பல சில்வர் ஜூப்ளி படங்களைத் தயாரித்தவர் செளத்ரி.

இவரது "சூப்பர் குட் பிலிம்ஸ்" அலுவலகம் சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள தியாகராயர் சாலையில்உள்ளது.

தனது அலுவலகத்தில் செளத்ரி ரூ.9 லட்சம் பணத்தை வைத்திருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 9, 2002) செளத்ரி பணத்தை எடுத்துப் பார்த்தபோது அதில் ரூ.6லட்சம் குறைந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் செளத்ரி புகார் கொடுத்தார்.

போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil