Don't Miss!
- Technology
வாத்தி கம்மிங்.. என்னது இது பார்முலா இல்லையா? போன் நம்பரா? முடுஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்.!
- News
அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க முடியாது - ஹைகோர்ட் அதிரடி
- Lifestyle
உங்க பிறந்த தேதி 2,11,20 மற்றும் 29 இதுல ஒன்னா? அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Finance
இந்தியாவுக்குக் கிளம்பும் நேரம் வந்தாச்சு.. NRI டெக் ஊழியர்கள் கண்ணீர்..!
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. தோர் நடிகரின் மகன் என்னம்மா சர்ஃபிங் பண்றாரு.. மனைவியும் தான்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் திரைப்படங்களில் தோர் கடவுளாக நடித்து அசத்தியவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் விடுமுறையை கழித்து வருகிறார்.
அலை சறுக்கு சாகசத்தை கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பண்ணிய நிலையில், அவரது குட்டி பையன் மற்றும் மனைவியும் சர்ஃபிங் செய்து அசத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் வெளியிட்டுள்ளார்.
குடும்பத்துடன் தீவு ஒன்றில் விடுமுறையை கொண்டாடும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி உள்ளார் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்.
வேற
வழியே
இல்லை...
மீண்டும்
காமெடி
ரூட்டுக்கு
திரும்பும்
சந்தானம்...
கைகொடுக்கும்
அஜித்!

தோர் நடிகர்
மார்வெல் திரைப்படங்களில் தோர் கடவுளாக நடித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். அவெஞ்சர்ஸ் படத்திலும் தோர் சீரிஸ் படங்களிலும் தோர் ஆக சுத்தியலை தூக்கி சுற்றி எதிரிகளை பந்தாடி வருபவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். இந்நிலையில், புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு உள்ளார்.

சர்ஃபிங் செய்யும் தோர்
ஹாலிவுட் ஹீரோக்கள் பலரும் ஸ்டண்ட் காட்சிகளுக்கே டூப் போடாமல் நடிப்பவர்கள். ரியல் லைஃப்பிலும் விமானம் ஓட்டுவது, சர்ஃபிங் செய்வது என ஏகப்பட்ட திறமைகளை உடையவர்கள். கடலில் அலையோடு விளையாடும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

புலிக்கு பிறந்தது
புலிக்கு பிறந்தது பூனையாக மாறுமா என்கிற பழமொழிக்கு ஏற்ப கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மகனும் அலை சறுக்கில் அட்டகாசமாக தனியாளாக கடலில் சர்ஃபிங் செய்யும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹாலிவுட் நடிகர்களான டுவைன் ஜான்சன் உள்ளிட்ட பலரும் மகனை பாராட்டி உள்ளனர்.

மனைவியும் மாஸ் காட்டுறாங்க
கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் அவரது மகன் மட்டுமின்றி கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் மனைவி எல்ஸா படாகியும் பிகினி உடையில் தாறுமாறாக சர்ஃபிங் செய்யும் போட்டோக்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்.

செம சேட்டை
பீச்சில் மரம் அருகே பிகினி உடையில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் மனைவி நின்றிருக்க மரத்தில் இருந்து எகிறி குதித்தபடி கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் செம சேட்டையாக எடுத்த போட்டோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் வெளியான தோர் ரக்னோரக் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பெரும் பின்னடவை சந்தித்தது. அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.