முகத்தில் குத்தியது அவ்வளவும் நடிப்பா?...போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கலையே ஏன்?...நெட்டிசன்கள் கோபம்
லாஸ் ஏஞ்சல்ஸ் : வில் ஸ்மித் முகத்தில் குத்தியது தொடர்பாக கிரிஸ் ராக் போலீசில் புகார் அளிக்க மறுத்து வருவதால் நெட்டிசன்கள் செம கடுப்பாகி உள்ளனர். அப்படியானால் எல்லாமே டிராமா தானா, உண்மை கிடையாதா என கோபமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் மேடையில் நின்று கொண்டிருந்த கிரிஸ் மீது, ஸ்மித் முகத்தில் ஓங்கி குத்தியது தான் சோஷியல் மீடியாவில் பெரிய விவாத பொருளாகி உள்ளது. உலகமே இதைப் பற்றி தான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறது.

முகத்தில் குத்து விட்ட நடிகர்
காமெடி நடிகரான கிரிஸ் ராக், சிறந்த டாக்குமென்ட்ரி படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட போது, ஸ்மித்தின் மனைவி மொட்டை தலையுடன் இருப்பதை, 1997 ம் ஆண்டு வெளியான G.I.Jane படத்தில் வரும் Demi Moore போல் இருப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்மித், மேடைக்கு வந்து கிரிஸ் முகத்தில் குத்தியதுடன், தனது இருக்கையில் வந்து அமர்ந்த பிறகும், என் மனைவியை பற்றிப் பேச கூடாது என கத்தினார்.

புகார் கொடுக்க மறுப்பு
இது பற்றி லாஸ் ஏஞ்சல் போலீசார் கூறுகையில், கிரிசை, ஸ்மித் தாக்கியது உறுதியாகி உள்ளது. அனைவரும் பார்த்துள்ளனர். விசாரித்ததில் இது இரு தனி மனிதர்களிடையே நடந்த சண்டை என தெரிகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவரே புகார் தர மறுக்கிறார். ஒருவேளை இனிமேல் அவர் புகார் கொடுத்தால் அது பற்றி முழுமையாக விசாரிக்கப்படும் என்கின்றனர்.

மன்னிப்பு கேட்ட ஸ்மித்
அதே சமயம், விருதை பெற்ற பிறகு உணர்ச்சிகரமாக பேசிய ஸ்மித் தன்னுடைய செயலுக்காக ஆஸ்கார் அமைப்பிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அகாடமியிடமும், மற்ற சக நடிகர், நடிகைகள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இது அழகான தருணம். விருது வாங்கியதற்காக நான் அழவில்லை. இது வெறும் எனக்கான விருதல்ல. இது அனைத்து மக்கள் மீதும் விழும் ஒளியாகும் என்றார்.

இப்படி தான் மன்னிப்பு கேட்டாரா
கிரிசை அடித்ததற்கும், விருது வாங்கியதற்கும் இடையே ஸ்மித் சென்று, Glory, Training Day படங்களுக்காக விருது வென்ற Denzel Washington யை சந்தித்துள்ளார். அவர், இது போன்ற போன்ற நெருக்கடியாக சமயத்தில் தான் கவனமாக இரக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த சமயத்தில் சாத்தான் உனக்குள் வந்து விடும் என அறிவுரை வழங்கி உள்ளார். அதற்கு பிறகு தான் ஸ்மித் மன்னிப்பு கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











