»   »  இது கிறிஸ்துமஸ் வெள்ளி... கத்தி சண்டை, மணல் கயிறு 2, பவெதே ரிலீஸ்!

இது கிறிஸ்துமஸ் வெள்ளி... கத்தி சண்டை, மணல் கயிறு 2, பவெதே ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 2 தினங்கள்தான் உள்ளன. இன்று கிறிஸ்துமஸ் வெள்ளி. இந்த நாளில் 3 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

அவற்றில் முக்கியமானது கத்தி சண்டை. வடிவேலுவின் கம்பேக் படம் என்பதால் இந்த வார கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் படமாகப் பார்க்கப்படுகிறது.

விஷால் - வடிவேலு

விஷால் - வடிவேலு

சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு, தமன்னா, சூரி நடித்த கத்தி சண்டை டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் என்பதால் இதற்குத் தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் பொங்கல் சமயத்தில் வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக சிங்கம் 3 படம் அடுத்த மாதம் வெளியாவதால் கத்தி சண்டையின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மணல் கயிறு 2

மணல் கயிறு 2

எஸ்வி சேகர் மகன் அஸ்வின் நடித்துள்ள மணல் கயிறு 2 இன்று வெளியாகிறது. அஸ்வின் இதற்கு முன் நடித்த எந்தப் படமும் எடுபடவில்லை. மணல் கயிறு படத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த விசு இந்தப் படத்திலும் இருக்கிறார். படம் ரசிகர்களைக் கவருமா என்பது நாளை தெரிந்துவிடும்.

பலே வெள்ளையத் தேவா

பலே வெள்ளையத் தேவா

தாரை தப்பட்டை, வெற்றி வேல் மற்றும் கிடாரி என வரிசையாக மூன்று தோல்விப் படங்களைத் தந்துள்ள சசிகுமார் மிகுந்த நம்பிக்கையுடன் ரிலீஸ் பண்ணும் படம் வெள்ளையத் தேவா. ஆனால் ஒரு பெற்றிப் படத்துக்குரிய அறிகுறி எதுவும் இந்த பவெதே-வில் தெரியவில்லை. கோவை சரளா காமெடியை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார் சசிகுமார்.

டங்கல்

டங்கல்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ஆமிர்கானின் டங்கல் படத்தின் தமிழ் டப்பிங்கும் ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்கு இணையாக வெளியாகிறது.

English summary
This Friday, Christmas Weekend 3 direct Tamil films and Aamir Khan's Dungal are releasing worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil