»   »  கமலை சந்திக்கவிருக்கும் உலகப்புகழ் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்!

கமலை சந்திக்கவிருக்கும் உலகப்புகழ் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜேம்ஸ் பாண்ட் படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்குகிறாரா?- வீடியோ

சென்னை : கமல்ஹாசன் தற்போது புதிதாக கட்சி தொடங்கி, சின்னம், கொடி எல்லாவற்றையும் வெளியிட்டு பொதுக்கூட்டங்களின் வாயிலாக மக்களைச் சந்தித்து வருகிறார். வெகு விரைவில் தீவிர அரசியலில் இறங்கவுள்ளார் கமல். அடுத்த மாதம் திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கிடையே, கடைசியாக இவர் 'இந்தியன் 2' படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். கமல் நடித்து பணிகள் முடிந்திருக்கும் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'இந்தியன் 2' படத்திற்காக புது ஸ்டைலில் இறங்கியிருக்கிறார்.

Christopher nolan comes to meet kamalhaasan

தற்போது கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கமல்ஹாசனை சந்திக்கவிருக்கிறார்.

'மொமென்டோ', 'இன்டர்ஸ்டெல்லார்', 'இன்செப்ஷன்', 'டங்கிர்க்' ஆகிய உலகப்புகழ்பெற்ற படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் விரைவில் இந்தியா வரவிருக்கிறார். இந்தியாவில் ஒரு ஹாலிவுட் இயக்குனருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது கிறிஸ்டோபர் நோலனுக்கு தான்.

வரும் மார்ச் 29-ம் தேதி தனது மனைவியுடன் மும்பை வருகிறார் கிறிஸ்டோபர் நோலன். அவர் இயக்கிய 'டன்கிர்க்' திரைப்படம் நோலனின் முன்னிலையில் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்யப்படவுள்ளது. அங்கு கலந்துரையாடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அது முடிந்த பிறகு நடிகர் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், ஆமிர் கான், அனுராக் காஷ்யப், மணிரத்னம், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட இந்தியாவின் திரை ஆளுமைகளோடு நோலன் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், ரசிகர்கள் செம மகிழ்ச்சியில் உள்ளனர்.

English summary
Christopher Nolan, the famous director of Hollywood, will meet Kamal Haasan and other famous personalities. Christopher Nolan will came with his wife to visit India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X