»   »  கமலின் அத்தனை சிறந்த படங்கள் இருக்கும்போது 'பாபநாசம்' தான் பார்த்தாரா நோலன்?

கமலின் அத்தனை சிறந்த படங்கள் இருக்கும்போது 'பாபநாசம்' தான் பார்த்தாரா நோலன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமலுக்கு கிறிஸ்டோபர் நோலன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

மும்பை : மும்பையில் நடைபெற்ற சினிமா தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கும் ஹாலிவுட் சினிமா இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் நேற்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார்.

இன்டஸ்டெல்லர், இன்செப்ஷன், டார்க் நைட் போன்ற பிரபலமான படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். ஹாலிவுட்டில் மிகவும் மதிக்கதக்க இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது படங்களையும், குறியீடுகளையும் பார்த்து இந்தியா உள்ளிட்ட உலக ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

Christopher nolan watches kamals papanasam

இந்நிலையில், கமல்ஹாசனை சந்தித்த நோலன் அவரிடம் 'பாபநாசம்' படம் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார். "பாபநாசம் படத்தை நோலன் பார்த்ததை என்னால் நம்பமுடியவில்லை" என்று மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல்.

மேலும், 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் நகலை நோலனுக்கு வழங்கினேன் என்றும் தெரிவித்துள்ளார் கமல். இதில் பலரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர். கமல்ஹாசனின் திறமையைச் சொல்லும் எத்தனையோ படங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால், நோலன் ஏன் 'பாபநாசம்' படத்தைப் பார்க்கவேண்டும்? பாபநாசம் படத்தின் டைரக்டர் ஜீத்து ஜோசப். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக் தான் 'பாபநாசம்' படம். பாபநாசம் படத்தை விட பல மடங்கு ஆச்சரியமளிக்கும் பல படங்களில் நடித்திருக்கிறார் கமல்.

கமலின் கதை சொல்லலுக்கும், குறியீடுகளுக்கும் உதாரணம் சொல்லப்படும் 'ஹே ராம்' பார்க்காமல் நோலன் 'பாபநாசம்' பார்த்தது மண்மணம் சார்ந்த தளத்தில் மிக எளிமையான கதை என்பதாலா தெரியவில்லை. எது எப்படியோ, தமிழ் படத்தைப் பார்த்தார் என்பதற்காக பெருமைப் பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.

English summary
Christopher Nolan meets actor Kamalhaasan. Nolan has said that he had seen Papanasam movie. Kamal has acted in many films that are many times surpassing Papanasam. But Nolan has said he has seen a movie directed by a Malayalee director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X