»   »  ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்கும் ஆசை உள்ளது! - கிறிஸ்டோபர் நோலன்

ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்கும் ஆசை உள்ளது! - கிறிஸ்டோபர் நோலன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜேம்ஸ் பாண்ட் படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்குகிறாரா?- வீடியோ

"அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை நான் இயக்கவில்லை... ஆனாலும் அந்த சீரிசில் ஒரு படம் இயக்கும் ஆசை உள்ளது," என்று பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் அடுத்த பாகத்தை இயக்க புதிய இயக்குநரைத் தேடிய படத் தயாரிப்பு நிறுவனம், கடைசியாக கிறிஸ்டோபர் நோலனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Christopher Nolens wish to directing a bond movie

ஆனால், தான் அந்தப் படத்தை இப்போதைக்கு இயக்கவில்லை என நோலன் தெரிவித்துள்ளார்.

"எனக்கு பாண்ட் படம் இயக்குவதில் விருப்பமுண்டு. தயாரிப்பாளர்கள் பார்பரா மற்றும் மைக்கேல் இதுபற்றிப் பேசியது உண்மைதான். ஆனால் முந்தைய 2 படங்களின் இயக்குநர் சாம் மெண்டிஸ் சிறப்பான படைப்பைத் தந்துள்ளார். அதனால் இப்போதைக்கு அவர்களுக்கு நான் தேவையில்லை. ஆனால் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எப்போதும் என்னை உத்வேகப்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் ஒரு படம் இயக்க எனக்கு விருப்பம் இருக்கிறது," என்று நோலன் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

English summary
Director Christopher Nolan has conveyed his wish to direct a Jamesbond movie in future.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X