டான் பார்த்துட்டு ரஜினி என்ன சொன்னாரு...ரஜினி ஸ்டைலில் பேசி காட்டிய சிபி சக்கரவர்த்தி

சென்னை : டான் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, வசூலை குவித்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் தாண்டி பரபரப்பாக பேசப்படுவது டான் படம் பார்த்து விட்டு ரஜினி கொடுத்த கமெண்ட்ஸ் தான். அதுவும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கால் செய்து ரஜினி பாராட்டியது தான் செம ஹைலைட்டாக அமைந்துள்ளது.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் ரிலீசான படம் டான். சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா,சூரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள காமெடி, சென்டிமென்ட் படமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பள்ளி, கல்லூரி வாழ்க்கையின் கலாட்டாக்கள், தந்தை - மகன் பாசம், ஒரு இளைஞனின் லட்சியம் என பலவற்றின் கலவையாக டான் படம் எடுக்கப்பட்டிருந்தது. முதல் படமே வெற்றிபடமாக அமைந்து விட்டதாலும், முதல் 3 நாட்களிலேயே 50 கோடியை வசூல் செய்து விட்டதாலும் படக்குழுவினர் பெரிய கேக் வெட்டி சக்சஸ் பார்டி வைத்து கொண்டாடி உள்ளனர்.

கண்ணீர் விட்ட ரஜினி

கண்ணீர் விட்ட ரஜினி

டான் படத்தை பார்த்து விட்டு விமர்சகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டிய நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் சமீபத்தில் டான் படம் பார்த்துள்ளார். படத்தை பார்த்து விட்டு, சிவகார்த்திகேயனுக்கு கால் செய்த ரஜினி, சூப்பர், சூப்பர் ஃபென்டாஸ்டிக். நல்ல நடிப்பு. கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை என கூறி உள்ளார். இதை சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

சிபியிடம் என்ன சொன்னார்

சிபியிடம் என்ன சொன்னார்

இந்நிலையில் சிபி சக்கவர்த்தியிடமும் பேட்டி ஒன்றில் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தலைவர் டான் படம் பார்க்கிறார் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். நாங்கள் குரூப்பில் ஷேர் செய்து கொண்டோம். சக்சஸ் பார்ட்டி நடந்து கொண்டிருந்த போது முதலில் சிவகார்த்திகேயனுக்கு கால் செய்து பாராட்டினார். பிறகு அனிருத்திடம் பேசிய ரஜினி சார், பக்கத்தில் டைரக்டர் இருக்கிறாரா என கேட்டு என்னிடம் பேசினார் என்றார்.

 ரஜினி குரலில் பேசிய சிபி

ரஜினி குரலில் பேசிய சிபி

ரஜினி பேசியதை ரஜினி குரலில் பேசிக் காட்டிய சிபி சக்கரவர்த்தி, சூப்பர். சூப்பர் கண்ணா. படம் நல்லா இருக்கு . இன்னும் நல்லா பண்ணுங்க என்றார். அவர் கண்ணா என சொல்வதை கேட்டதும் எனக்கு வானத்தில் பறப்பதை போல் இருந்தது. நான் ஐ லவ் யூ சார் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்டையிலாக சிரித்தார் என்றார். வாழ்க்கையில் என்றாவது, ஏதாவது ஒரு படத்திற்கு இப்படி ஒரு பாராட்டு தலைவரிடம் இருந்து கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் முதல் படத்திலேயே கிடைக்கும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றார் சிபி சக்கரவர்த்தி.

டிரெண்ட் ஆகும் வீடியோக்கள்

டிரெண்ட் ஆகும் வீடியோக்கள்

டான் படத்தை ரஜினி இந்த அளவிற்கு பாராட்டிய விஷயம் மட்டுமல்ல, ரஜினி ஸ்டைலிலேயே சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் பேசிக்காட்டிய வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி செம டிரெண்டாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X