பேசாம நீ நடிக்க போகலாம்டா...அமீரிடம் காண்டாகி கத்திய சிபி

சென்னை : பிக்பாசின் இன்றைய முதல் ப்ரோமோவை பார்த்து சிபி மட்டுமல்ல ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்ததுடன் கடுப்பாகி விட்டனர். சிபி வெளியே போனாரா இல்லையா என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளனர்.

Recommended Video

Bigg Boss வீட்டை விட்டு வெளியேறிய CIBY | Ciby Walkout with 12 Lakhs | Ciby, Amir, Bigg Boss 5 Tamil

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகிறவர் யார், டைட்டிலை வெல்ல போவது யார், இறுதிப் போட்டிக்கு யாரெல்லாம் செல்ல போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வெளியேறிய சிபி

வெளியேறிய சிபி

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் சிபி வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும், பலரும் இது புத்திசாலிதனமான முடிவு என வரவேற்றுள்ளனர்.

பணப்பெட்டியை எடுத்தாரா அமீர்

பணப்பெட்டியை எடுத்தாரா அமீர்

ஆனால் இன்றைய 95 வது நாளின் எபிசோடிற்கான முதல் ப்ரோமோவில் அமீர், தான் அந்த பணப்பெட்டியை எடுக்க போவதாக அனைவரிடமும் கூறுகிறார். நான் ஏற்கனவே ஃபைனலுக்கு போய் விட்டேன். இருந்தாலும் டைட்டிலை வெல்ல மாட்டேன் என எனக்கு நன்றாக தெரியும். அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் இடையில் நிற்பதற்கு. இதை எடுத்துக் கொண்டு போகலாம் என நினைக்கிறேன் என்கிறார் அமீர்.

அமீரை பாராட்டிய சிபி

அமீரை பாராட்டிய சிபி

அமீரின் பேச்சைக் கேட்டு, சரியான முடிவு என அவரை கட்டிப்பிடித்து பாராட்டுகிறார் சிபி. இதனால் ரசிகர்கள் மிகவும் குழப்பமடைந்தனர். சிபி வெளியேறி விட்டார் என்கிறார்கள். ஆனால் ப்ரோமோவில் அமீர், பணத்தை எடுக்க போவதாக கூறுகிறாரே என ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

கடுப்பாகி கத்திய சிபி

கடுப்பாகி கத்திய சிபி

இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், கட்டிப்பிடித்த சிபியை கேமிராவிடம் கட்டி, கேமிராவை பாரும் மச்சான். பிராங்க் பண்ணினேன் என சொல்லி சிரிக்கிறார். இதைக் கேட்டு அனைவரும் கடுப்பாகி விட்டனர். நீ பேசாம நடிக்க டிரை பண்ணலாம்டா என அமீரிடம் கடுப்பாக சொல்கிறார் சிபி.

ப்ராங்க் பண்ணுனீங்களா

ப்ராங்க் பண்ணுனீங்களா

அமீர் சிரித்துக் கொண்டே, பெட்டியை எடுக்க போவதாக நேற்றே நிரூப்பிடம் சொன்னேன் நம்பி விட்டான். மாலை பிரியங்கா அக்காவிடம் சொன்னேன் என சொல்லி சிரிக்கிறார் அமீர். அமீரின் இந்த தத்ரூபமான நடிப்பு நிஜம் எனவே அனைவரையும் நம்ப வைத்தது.

ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்

ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்

சிபி வெளியே போய் விட்டதால் இந்த வாரம் பாவனி அல்லது நிரூப் தான் எவிக்ட் ஆவார்கள் என பலர் கமெண்ட் செய்துள்ளனர். தாமரை சூட்கேஸ் எடுத்திருக்கலாம். ஓவர் நம்பிக்கை. இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளது. சிபி நல்ல திறமைசாலி என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிபியின் ஸ்மார்ட் மூவிற்கு பாராட்டுக்கள் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X