பணப்பெட்டியுடன் வெளியேறியதற்கு இது தான் காரணமா... சிபி சொன்ன அசத்தல் பதில்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. அமீர், நிரூப் ஆகியோர் ஃபைனலுக்கு சென்று விட்டார்கள். நேற்று ராஜுவும் காப்பாற்றப்பட்டு விட்டதால், அவர் மூன்றாவது ஃபைனலிஸ்ட் ஆகி விட்டார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 8th January 2022 - Promo 2 | Contestant பற்றி Ciby-யின் கருத்து!!

இந்த வாரம் நடத்தப்பட்ட பணப்பெட்டி டாஸ்க்கில் பிக்பாஸ் பணம் ரூ.3 லட்சத்தில் துவங்கி படிப்படியாக உயர்த்தப்பட்டது. இறுதியாக ரூ.12 லட்சம் வைக்கப்பட்ட போது அதை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறினார் சிபி.

பணத்துடன் வெளியேறிய சிபி

பணத்துடன் வெளியேறிய சிபி

இறுதிப் போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர் சிபி. அவர் பணப்பெட்டியுடன் வெளியேறியது அவரது ரசிகர்கள், பார்வையாளர்கள் மட்டுமல்ல சக போட்டியாளர்களுக்கே கடும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் ரூ.12 லட்சம் என்பது நல்ல தொகை என்பதால் அது புத்திசாலிதனமான முடிவு என பலரும் அதை வரவேற்று, பாராட்டினர்.

எதனால் இந்த முடிவு

எதனால் இந்த முடிவு

இந்நிலையில் நேற்றைய சனிக்கிழமை எபிசோடில் கமல், அகம் டிவி வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு, சிபியை மேடைக்கு அழைத்து பேசினார். கதவை திறந்து வெளியே போகும் வரை வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கும் என சொன்ன நீங்கள் எதற்காக பணப்பெட்டியுடன் வெளியே போனீர்கள். உங்களை அந்த முடிவை எடுக்க வைத்தது எது என சிபியிடம் கேட்டார்.

பயந்து ஓடிய நிரூப்

பயந்து ஓடிய நிரூப்

அதற்கு பதிலளித்த சிபி, எந்த நிமிடம் என சரியாக சொல்ல தெரியவில்லை. ஆனால் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக உப்பு, சர்க்கரை, வெங்காயத்தை ஸ்டோர் ரூமிற்குள் வைக்க வேண்டும் என நிரூப் சொன்னதும் நான் தான் அவனை எதிர்த்து கேள்வி கேட்டேன். உனக்கு பயம் வந்து விட்டது அதனால் தான் இப்படி ஓடுகிறாய் என்றேன். அன்று இரவு முழுவதும் அதே நினைவு தான் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

இது தான் காரணம்

இது தான் காரணம்

உண்மையை சொல்ல போனால் எனக்கே அந்த பயம் வந்து விட்டது. அதனால் தான் அவனுடன் அப்படி வாக்குவாதம் செய்துள்ளேன். அதை யோசித்து பார்த்தேன். நமக்கே பயம் இருக்கும் போது மற்றவர்களை கேள்வி கேட்பது சரியாகாது என தோன்றியது. பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே, நான் எப்போது நானாக இல்லாமல் நடிப்பதை போல் எனக்கு தோன்றுகிறதோ அப்போது வெளியேறி விட வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

என்ன மனுஷன்யா இவரு

என்ன மனுஷன்யா இவரு

அதனால் இனியும் நான் தொடர்ந்து இருந்தால் நடிப்பதை போல் ஆகி விடும். இதுவரை நான் உண்மையாக இருந்ததற்கே அர்த்தம் இல்லாமல் ஆகி விடும். அதனால் தான் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விடலாம் என முடிவு செய்தேன் என்றார். விளையாட்டில் கூட இவ்வளவு நேர்மையா. என்ன மனுஷன்யா இவர் என சிபியின் வெளிப்படையான அசத்தல் பதிலை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

பாராட்டு ரசிகர்கள்

பாராட்டு ரசிகர்கள்

பணப்பெட்டியை எடுத்த போது புத்திசாலிதனமான முடிவு என அவரை பாராட்டிய ரசிகர்கள், தற்போது அவரது நேர்மை, நல்ல குணம் ஆகியவற்றை பாராட்டி வருகின்றனர். இதனால் வீட்டிற்குள் இருந்த போது இருந்ததை விட தற்போது சிபியின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X