twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நமக்குள் பிளவு வேண்டாம் நடிகர்களே.. சிஐடி சகுந்தலா அழைப்பு

    By Shankar
    |

    ஈரோடு: நடிகர்களுக்குள் பிளவு ஏற்படக் கூடாது என்று பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கவிதாலயம் இசைப் பள்ளி சார்பில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக் கொண்டார் சகுந்தலா. பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், தேர்தலை வைத்து நடிகர்களுக்குள் பிளவு ஏற்படக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.

    சிஐடி சகுந்தலாவின் பேச்சிலிருந்து:

    600க்கும் மேற்பட்ட படங்களில்

    600க்கும் மேற்பட்ட படங்களில்

    இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என 4 முதலமைச்சர்களுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளேன்.

    நடிகர்கள் அரசியலிலும் இருப்பது பெருமை

    நடிகர்கள் அரசியலிலும் இருப்பது பெருமை

    திரைப்படத்துறையில் இருந்தவர்கள் இன்று அரசியலிலும் முக்கிய இடங்களில் இருப்பது என்னைப் போன்ற திரைப்படக் கலைஞர்களுக்குப் பெருமையான விஷயம். கதையில் கவனம் செலுத்தி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினால் படங்கள் வெற்றியடையும்.

    சங்கம் பிரியக் கூடாது

    சங்கம் பிரியக் கூடாது

    நடிகர் சங்கம் பல வகையிலும் நடிகர், நடிகைகளுக்கு பல உதவிகளைச் செய்து வருகிறது. என்னைப் பொருத்தவரை சரத்குமார் அணி, நாசர் அணி என இரு அணிகளாகப் பிரிந்து இருப்பது நடிகர், நடிகைகளைப் பாதிக்கும் என்றே கருதுகிறேன்.

    ஒருங்கிணைந்து செயல்படுங்கள்

    ஒருங்கிணைந்து செயல்படுங்கள்

    எனவே எதிர்காலத்தில் இரு அணியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். சினிமா ஒரு கோயில் போன்றது. ஆகவே, நடிகர்களிடம் பிளவு ஏற்படக் கூடாது என்றார். பேட்டியின்போது, கவிதாலயா ராமலிங்கம் உடனிருந்தார்.

    English summary
    Veteran actress CID Shakunthala has called for unity among actors in the Nadigar sangam elections.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X