»   »  சென்னை திரைப்படவிழா... இந்தப் படங்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள்?

சென்னை திரைப்படவிழா... இந்தப் படங்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

13 ஆவது சர்வதேச திரைப்படவிழா சென்னையில் இன்று மாலை தொடங்கியது.

வரும் 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்தத் திரைப்படவிழாவில் போட்டிப் பிரிவில் பனிரெண்டு தமிழ்ப் படங்கள் பங்கேற்கின்றன.


அவை:


CIFF's film selection highly criticised

ஜோதிகா நடித்த 36 வயதினிலே, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, கிருமி, கோடைமழை, மாயா, ஆரஞ்சு மிட்டாய், ஓட்டத்து தூதுவன், பிசாசு, ரேடியோ பெட்டி, சார்லஸ் ஷபி கார்த்திகா, தாக்க தாக்க, தனி ஒருவன்.


இந்தப் படங்களின் தேர்வைப் பார்த்து சாதாரண ரசிகரும் கமெண்ட் அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, கிருமி, ஆரஞ்சு மிட்டாய், சார்லஸ் ஷபி கார்த்திகா, தாக்க தாக்க போன்ற படங்கள் வெளியானாலும், அரங்குகளில் ஓரிரு நாட்கள்தான் தாக்குப்பிடித்தன.


மக்களிடம் வரவேற்பு பெறாத இந்தப் படங்களின் கதை, உருவாக்கம் போன்றவையாவது சிறப்பாக இருந்தனவா என்றால் அதுவும் கேள்விக் குறிதான். ரேடியோபெட்டி, கோடை மழை போன்ற படங்கள் இன்னும் ரசிகர்கள் பார்வைக்கே வரவில்லை.


எந்த அடிப்படையில் இந்தப் படங்களை போட்டிப் பிரிவுக்கு தேர்வு செய்தார்கள் என்ற கேள்வியை பலரும் முன்வைத்துள்ளனர். சிபாரிசு அடிப்படையில்தான் இந்தப் படங்கள் போட்டிக்கு தேர்வாகியுள்ளதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.


பதில் சொல்வார்களா சென்னை சர்வதேச திரைப்பட விழா அமைப்பாளர்கள்?

English summary
The list of Tamil movies selected for Chennai International Film Festiva is highly criticised by film goers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil