twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவில் அனைவருமே தங்கள் சம்பளத்தை குறைக்க முன் வரணும், அதுதான் நல்லது.. இளம் ஹீரோ ஆசை!

    By
    |

    சென்னை: சினிமாவில் சம்பள குறைப்பு விஷயத்தில் அனைவரும் முன் வந்தால் நன்றாக இருக்கும் என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Harrish Kalyan reduced his Salary | Varalakshmi Sarathkumar, Harathi Emotional

    கொரோனா காரணமாக, சினிமா துறை முடங்கியுள்ளது. இதில் பல கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.

    கடுமையான நஷ்டத்தைச் சந்திக்கும் துறையாக சினிமா இருக்கிறது. தமிழ், மட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாவும் அந்த நிலையிலேயே உள்ளன.

    அம்மான்னா.. சும்மா இல்லடா.. அதுல்யா ரவி முதல் வரலக்‌ஷ்மி வரை 'அம்மா' குறித்து உருகும் பிரபலங்கள்!அம்மான்னா.. சும்மா இல்லடா.. அதுல்யா ரவி முதல் வரலக்‌ஷ்மி வரை 'அம்மா' குறித்து உருகும் பிரபலங்கள்!

    போஸ்ட் புரொடக்‌ஷன்

    போஸ்ட் புரொடக்‌ஷன்

    இந்நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை நாளை முதல் தொடங்கிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நடிகர், நடிகைகள், முன்னணி டெக்னீனியன்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டப்பிங் உள்ளிட்ட வேலைகளுக்கு 5 பேர் மட்டுமே இருக்கலாம் என்றும் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை சரியாகக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி

    இந்நிலையில் முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தில் பாதியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழ், மட்டுமல்லாமல், மற்ற மொழிகளிலும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், முதல் ஆளாக நடிகர் விஜய் ஆண்டனி, தனது சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைப்பதாக அறிவித்தார். இதையடுத்து தயாரிப்பாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    டாப் ஹீரோக்கள்

    டாப் ஹீரோக்கள்

    இதையடுத்து ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி, நடிகர்கள் உதயா, அருள்தாஸ் ஆகியோரும் தங்கள் சம்பளத்தை குறைப்பதாக அறிவித்தனர். ஆனால், டாப் ஹீரோக்கள் யாரும் குறைப்பதாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பெரிய சம்பளம்

    பெரிய சம்பளம்

    அதில், "கொரோனா காரணமாக நடிகர் விஜய் ஆண்டனி 25% சம்பளத்தை குறைக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். தயாரிப்பாளர்கள் நலன் கருதி அவர் எடுத்திருக்கும் முடிவு ஆரோக்கியமானது. நானும் எனது சம்பளத்தில் 20% குறைக்கப் போவதாக தெரிவித்துள்ளேன். நான் பெரிய சம்பளம் வாங்கும் ஹீரோ இல்லை என்றாலும் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

    இயல்பு நிலை திரும்ப

    இயல்பு நிலை திரும்ப

    இயக்குநர் ஹரியும் சம்பளக் குறைப்பு தொடர்பாக தெரிவித்திருந்தார். அனைவருமே முன்னுக்கு வந்தால் நல்ல விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என தொடங்கி அனைத்து மக்களும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Harish kalyan asks, all actors should come forward to reduce their salaries
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X