»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை நிர்வாகத்தை யார் மேற்கொள்வது என்ற பிரச்சினைதொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கேயார்உண்ணாவிரதம் இருந்தார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை தலைவராக இப்ராகிம் ராவுத்தர் இருந்து வருகிறார்.இவருக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கேயார் தலைமையில் ஒரு பிரிவினர் குரல்எழுப்பியுள்ளனர். கேயார் குழுவினரை எதிர்த்து இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை எதிர்த்தும், இந்தப் பிரச்சினையில் தேவையில்லாமல் சென்னை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்கே.ராஜன் தலையிடுவதாகவும் கூறி போட்டி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கேயார் அறிவித்திருந்தார்.அதன்படி சென்னையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தென்னிந்திய வர்த்தக சபை வாளகத்தில் அவர்உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கேயார், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப்போராட்டத்தில் கே.ராஜன் குழுவினர் கலாட்டா விளைவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்துஅப்பகுதி முழுவதிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்தபோது கே.ராஜன் அங்கு வந்தார். கை நிறைய ஆப்பிள்பழங்களுடன் வந்த அவர் நேராக கேயாரிடம் சென்றார். அவரிடம் ஆப்பிள் பழங்களைக் கொடுத்து விட்டுதிரையுலகினரின் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு உண்ணாவிரதப் போராட்டம் வேறு நடத்துகிறீர்களா என்றுகேட்டார். இதையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது.

ராஜனுக்கும், உண்ணாவிரதம் இருந்த கேயார் மற்றும் சிலருக்கும இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்துபோலீஸார் அங்கு விரைந்து வந்த ராஜனை விலக்கி அப்புறப்படுத்தினர். பின்னர் அவரைக் கைது செய்து ஜீப்பில்அழைத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கேயார் பேசுகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள சில சுயநலவாதிகள் சங்கப்பணத்தைக் கொள்ளையடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கே.ராஜன் உள்ளார். அவரது அராஜகப்போக்கு தாங்க முடியவில்லை. அவருடைய செயல்களை யார் கண்டிப்பது என்ற தயக்கம் திரையுலகில் நிலவிவருகிறது.

பூனைக்கு நான் மணி கட்டுகிறேன் என்று முன்வந்துதான் இந்தப் போராட்டத்தைத் துவக்கியுள்ளேன்.கோழையாக நூறு ஆண்டுகள் வாழ்வதை விட வீரனாக ஒரு ஆண்டு வாழ்ந்து இறந்தால் போதும் என்றமுடிவில்தான் களம் இறங்கியுள்ளேன்.

இந்தப் போராட்டத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் விழிப்புணர்வு ஏற்பட்டு கே.ராஜனின் கொட்டம்அடக்கப்பட்டால் எனக்கு சந்தோஷமே என்றார்.

Read more about: accuse, chennai, cinema, k rajan, keyaar, tamilnadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil