»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சினிமா படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்த் திரைப்படப் பாதுகாப்புக் கழகம் சென்னையில்வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், நடிக, நடிகையர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.

பிரச்சனை முடிவுக்கு வரும்வரை தமிழ்த்திரைப்படங்களின் படப்பிடிப்புக்களைத் தொடங்க மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 43நாட்களாக இந்தப் பிரச்சினை நீடித்து வருகிறது. புதிய படங்களின் படப்பிடிப்புகள் தொடங்காததால் தொழிலாளர்களும் வேலையின்றி வறுமையில்வாடுகின்றனர்.

இதற்கிடையே, நடிக நடிகையர்களும், தயாரிப்பாளர்கள் சங்கமும் சுமூகமாகப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று தமிழ் திரைப்படப் பாதுகாப்புக்கழகத்தின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் திரைப்பட பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் ராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கேயார்,விநியோகஸ்தர்கள் சங்கச் செயலாளர் ருக்மாங்கதன், நடிகர்கள் பாக்யராஜ், பாபுகணேஷ் மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

புதிய படங்களின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும். முதல் பிரதி தயாரான நிலையில் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கும் 141 படங்களைவெளியிட வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் குடும்ப நிதி வழங்க வேண்டும். சங்கஉறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

40 பிரின்டுகளுக்கு மேல் எடுக்கப்படும் சிறு முதலீட்டுப் படங்களுக்கு கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆங்கிலப் படங்களுக்கு 100சதவீதம் வரிவிதிக்க வேண்டும். தரமான படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை ரூ 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil