»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 100 பின்னணிப் பாடகர்கள், பாடகியர்கள் பங்கேற்கும்இசை நிகழ்ச்சி சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

பிரபல இசைக் குழுவான லட்சுமன் ஸ்ருதி நிறுவனம் தான் இதனை நடத்துகிறது. இந் நிகழ்ச்சி மூலம் வசூலாகும்தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள்.

நாரதகான சபாவில் இந்த இசை நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பிரபல பின்னணிப்பாடகர்களான டி.எம்.செளந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ், கார்த்திக், திப்பு,மனோ, சுரேஷ் பீட்டர்ஸ்,

இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், தேவா, பரத்வாஜ், தினா,

பாடகியர்கள் எல்.ஆர்.ஈஸ்வரி, பரவை முனியம்மா, தேனி குஞ்சாரம்மா, மின்மினி, அனுபமா, பவதாரணி,ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ஏ.ஆர்.ரைஹானா, மாலதி லட்சுமன், சின்மயி, ஹரிணி உள்ளிட்டோர்பங்கேற்கிறார்கள்.

இவர்கள் தவிர நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அவரது மனைவி அனிதா குப்புசாமி, பாம்பேசகோதரிகள், அனுராதா ஸ்ரீராம், ராஜேஷ் வைத்யா உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

இரவு 9 மணி வரை 12 மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் முதலமைச்சர நிவாரணநிதிக்கு நேரடியாகவும் நிதியுதவியை அளிக்கலாம், ரூ. 1,000க்கும் அதிகமாக நிதியை வழங்குவோர், மேடை ஏறிபின்னணிப் பாடகர்களிடம் தங்களது நிதியை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் 12 மணி வரை ஒரு கட்டமாகவும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 2வதுகட்டமாகவும், பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை அடுத்த கட்டமாகவும், மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிவரை நானாகாவது கட்டமாகவும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும்.

3 மணி நேர நிகழ்ச்சியைக் காண விரும்புவர்கள் தலா ரூ. 50, 100, 150 என நன்கொடை கொடுத்து டிக்கெட்வாங்கிக் கொண்டு வரலாம். நாள் முழுக்கப் பார்க்க விரும்புபவர்களிடம் ரூ. 250, 500, 1,000 வகுப்புவாரியாககட்டணம் வசூலிக்கப்படும்.

இதில் வசூலாகும் பணம் முழுவதுமே முதலமைச்சர் சுனாமி நிவாரண நிதியில் சேர்க்கப்படவுள்ளதாக இசைக்குழுவின் தலைவரான லட்சுமண் தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil