»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாரதி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று மாநில செய்தி ஒளிபரப்புத்துறைஅமைச்சர் முல்லைவேந்தன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது பாரதி நினைவில்லம். இங்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்கத்தின் சார்பில் பாரதி திரைப்படத்தில் நடித்த கலைஞர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது.

இதில் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு பேசுகையில், பாரதி திரைப்படம்,தீண்டாமை ஒழிப்பிற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. அதனால் இத்திரைப்படத்திற்கு விலக்கு அளிப்பதுகுறித்துப் பரிசீலிக்கப்படும்.

படத்தில் இடம்பெறும் தீண்டாமைக்கு எதிரான காட்சிகளை டாக்குமென்டரிகளாக எடுத்து இந்தியா முழுவதும்ஒளிபரப்ப வேண்டும் என்றார் முல்லைவேந்தன்.

விழாவில், பாரதி திரைப்பட இயக்குநர் ஞானசேகரன், எழுத்தாளர் சுஜாதா, ரயில்வே போலீஸ் ஐ.ஜி.திலகவதி,பத்திரிக்கையாளர் ஞானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil