»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ராமராஜனுக்கும், அவரது மனைவி நளினிக்கும் விவாரத்து கிடைக்கும்விஷயத்தில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் ராமராஜனுக்கும் நடிகை நளினிக்கும் இடையே திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது காதல் மலர்ந்தது. காதலர்கள் இருவரும் 1987-ம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டனர். அருண், அருணா என்ற இரட்டைக் குழந்தையும்பிறந்தது.

ராமராஜனுக்கும், நளினிக்கும் இடையே 1999-ம் ஆண்டு பிரச்சனை வந்ததால்இவர்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து விவாரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ராமராஜன் தனது மனுவில் குழந்தைகள் பெயரில் தலா ரூ 10 லட்சம் முதலீடுசெய்வதகாவும், நளினிக்கு ஜீவனாம்சம் தருவதாகவும் ஒப்புக் கொண்டார்,இதையடுத்து நீதிபதி இருவரையும் 6 மாத காலம் பிரிந்திருக்குமாறும், அதற்குள் ரூ 10லட்சத்தை முதலீடு செய்யுமாறும் உத்தரவிட்டார்.

சென்ற 18-ம் தேதியுடன் 6 மாத கெடு முடிவடைந்தது.ஆனால் ராமராஜன் கூறியபடிகுழந்தைகள் பெயரில் பணம் செலுத்தவில்லை. இந்நிலையில் ராமராஜனும், நளினியும்குடும்ப நல நீதிபதி செளந்தரராஜன் முன்பு ஆஜரானர்கள்.

அப்போது ராமராஜன் தான் தயாரித்து இயக்கி வரும் சீறி வரும் காளை படம்வெளிவந்ததும் நளினிக்கு ரூ 7 லட்சம் கொடுப்பதாகவும், குழந்தைகள் பெயரில்முதலீடு செய்வதாக சொன்ன பணத்தை மதுரையில் இருக்கும் தியேட்டரை விற்றுகொடுத்து விடுவதாகவும் சொன்னார்.

குழந்தைகள் நன்கு வளர்ந்து விட்ட காரணத்தால் ராமராஜன், நளினி இருவரையும்விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் சேர்ந்து வாழ்வது குறித்து யோசிக்குமாறுகூறிய நீதிபதி அதற்கு 12 நாள் கெடுவும் விதித்தார்.

நீதிபதி விடுத்த கெடு செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. நீதிமன்றத்தில்நளினியும், ராமராஜனும் ஆஜரானார்கள். அப்போது ராமராஜன் தற்போது தன்னிடம்பணம் இல்லை எனவும் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்வதாக சொன்ன ரூ 10லட்சத்திற்கு பதிலாக மாதா மாதம் ரூ 10 ஆயிரம் தருவதாக கூறினார்.இது குறித்து மனுஒன்றும் தாக்கல் செய்தார்.

ஆனால் நளினி இதை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதன் பின் வழக்கை அடுத்தமாதம் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி செளந்தரராஜன், அதற்குள் குழந்தைகள்பெயரில் ராமராஜன் பணம் முதலீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil