»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நில விற்பனை மோசடிகுறித்த வழக்கில் நடிகை ராதாவும், அவரது கணவரும்வெள்ளிக்கிழமை திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ராதா திருநெல்வேலி ஏர்வாடி அய்யாத்துரைஎன்பவரிடமிருந்து நிலம் வாங்கியிருந்தார். அய்யாதுரை நிலத்தை விற்கும் போது தன்நிலத்திற்கு அருகில் இருந்த ஜப்ருல்லா என்பவரது நிலத்தையும் சேர்த்துவிற்றுவிட்டார்.

இது பற்றி ஜப்ரூல்லா திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி முதலாம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ராதா, அவரது கணவர்ராஜசேகரன் நாயர், அய்யாதுரை ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் கைதுவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

நடிகை ராதாவும் அவரது கணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.ஆனால் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன்ஜாமீன் வழங்கப்படட்து.

அதன் படி வெள்ளிக்கிழமை நடிகை ராதா. அவரது கணவர் ராஜசேகர நாயர்,அய்யாதுரை ஆகியோர் திருநெல்வேலி நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில்ஆஜரானார்கள்.

நீதிபதி கலாவதி, ராதாவுக்கும், அவர் கணவருக்கும் ஜாமீன் வழங்கினார். ஆனால்அவர்கள் அடுத்த மாதம் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனஉத்தரவிட்டார்.

நீதிமன்றத்தை விட்டு ராதா வெளியே வந்த போது நிருபர்கள் புகைப்படம் எடுக்கமுயன்றனர். புகைப்படம் எடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என ராதாவின் தாய் எச்சரித்தார். ராதாவுக்கு பாதுகாப்பாக ஸ்டண்ட்நடிகர்களும் வந்திருந்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil