»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சினிமா நிகழ்ச்சிகளை படம் பிடிக்க டி.விக்களுக்கு தடை விதிப்பது என்று விஜயகாந்த் தலைமையில் நடந்த திரைஉலக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ் திரை உலகை சேர்ந்த அனைத்து பிரிவினரும் ஒன்று சேர்ந்து தமிழ் திரை உலக கூட்டமைப்பு ஒன்றைதொடங்கி உள்ளனர்.

இந்த கூட்டமைப்பின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் வருமாறு:

தமிழ் திரைப்படங்களின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கு காரணம் டி.வி.க்களின் சினிமா ஆதிக்கமும்,திருட்டு விசிடிக்களும் தான் என தெரிய வந்துள்ளது.

எனவே அவற்றைத் தடுக்கும் பொருட்டும், திரை உலகை வாழ வைக்கவும் கீழ்க்கண்ட தீர்மானங்கள்எடுக்கப்படுகின்றன.

டி.வி.க்களில் டாப்-10 என்ற பெயரில் தங்களது விறுப்பு, வெறுப்புக்கு ஏற்ப படத்தை தாறுமாறாக வரிசைப்படுத்துகிறார்கள். டி.வி.க்களின் இப்போக்கிற்கு இந்த கூட்டமைப்பு தன்னுடைய கடுமையான கண்டனத்தைதெரிவிக்கிறது.

திரையுலகினரின் கட்டுப்பாட்டை மீறும் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களை திரையிடுவதை உடனடியாகநிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டி.விக்களுக்கு கொடுக்கப்படும் டிரெய்லர்கள் 3 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். எல்லா டி.விக்களும் ஒரேமாதிரியான டிரெய்லர் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அதுவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்வாயிலாகவே கொடுக்கப்பட வேண்டும்.

படத்துவக்க விழா, பாடல் கேசட் வெளியீடு, 100வது நாள் விழா கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பிரிமியர்காட்சிகள் மற்றும் வியாபார நோக்கோடு நடைபெறும் அனைத்து விழாக்களையும் டி.விக்களால் ஒளிபரப்புவதற்கு2002 ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திரை உலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், படஅதிபர்கள் போன்ற திரை உலகின் அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள் படித்தபோது அனைவரும் கை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil