»   »  ஒரு தலைக்காதல் கொலைகள்... சினிமா மூலம் சரி செய்யலாம்.. எங்ககிட்ட வாங்க.. வசந்தபாலன்!

ஒரு தலைக்காதல் கொலைகள்... சினிமா மூலம் சரி செய்யலாம்.. எங்ககிட்ட வாங்க.. வசந்தபாலன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்வது வேதனை அளிக்கிறது. சினிமாவால் இந்த சிக்கலை சரி செய்ய முடியும் என இயக்குநர் வசந்தபாலன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கீரா இயக்கத்தில் விஷ்ணு பிரியன்-அஸ்வினி ஜோடியாக நடித்துள்ள படம் 'மெர்லின்'. இவர்கள் தவிர தங்கர்பச்சான், மனோபாலா, சிங்கம்புலி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜெ.சதீஷ்குமார் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது:-

ஒரு தலைக்காதல் கொலைகள்...

தமிழகத்தில் ஒரு தலை காதல் கொலைகள் தொடர்ந்து நடப்பது வேதனை அளிக்கிறது. வகுப்பறைக்குள் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். வழிபாட்டு தலங்களிலும் கொலை நடக்கிறது. பட்டப் பகலில் இந்த கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பெண்களை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்படும் சூழ்நிலைகள் உள்ளன.

சினிமாவால் மாற்றம் நிச்சயம்...

சினிமாவால் மாற்றம் நிச்சயம்...

சினிமா மூலம் இந்த சிக்கல்களை சரி செய்ய முடியும். எனவே டைரக்டர்கள் பொறுப்புணர்வோடு படங்களை எடுக்க வேண்டும். சினிமா படங்கள் மூலம் சமூகத்தில் நடக்கும் ஒரு தலை காதல் கொலைகளை தடுக்க முடியும். இளையதலைமுறையினரின் எண்ணங்களையும் மாற்ற முடியும்.

அங்காடி தெரு...

அங்காடி தெரு...

நான் அங்காடி தெரு என்ற படம் எடுத்த பிறகு தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களின் வாழ்க்கையும் சிறப்பாக மாறி இருக்கிறது. ரஜினிகாந்தை வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினைகள் கபாலி படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற சமூக அக்கறை உள்ள படங்களை எடுக்க வேண்டும்" என்றார்.

மக்களின் மனநிலை...

மக்களின் மனநிலை...

இந்த விழாவில் இயக்குநர் தங்கர்பச்சான் பேசுகையில், "சிந்தனையாளர்களுக்கு சமூகத்தில் மரியாதை இல்லை. பல நல்ல படைப்பாளிகள் காணாமல் போய்விட்டனர். மோசமான படங்களை பார்க்கும் மன நிலைக்கு மக்கள் மாறி இருக்கிறார்கள். இந்த நிலைமைகள் மாற வேண்டும். மெர்லின் சிறந்த படமாக தயாராகியுள்ளது" எனத் தெரிவித்தார்.

ரஞ்சித்...

ரஞ்சித்...

நடிகர் ஆரி, டைரக்டர்கள் பா.ரஞ்சித், திரைவாணன், தாமிரா, மகிழ்திருமேனி, மீரா கதிரவன், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்ட பலர் இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள்.

English summary
Director Vasanthabalan is confident that cinema has the ability to reduce oneside love murders.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil