ரெய்டு நடக்கும் தயாரிப்பாளர்களின் சினிமா வாழ்க்கை...ஓர் ரவுண்ட் அப்
சென்னை : பிரபல சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச் செழியன், கலைப்புலி எஸ்.தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு, லட்சுமணன், சத்யஜோதி தியாகராஜன், சீனு ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் ரெய்டு நடந்து வருகிறது.
சென்னை மற்றும் மதுரையில் பல இடங்களில் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த வருமான வரித்துறை ரெய்டு காரணமாக கோலிவுட்டே அதிர்ச்சி அடைந்துள்ளது. எதற்காக இந்த ரெய்டு, அதுவும் ஒரே சமயத்தில் இத்தனை பேரின் அலுவலகங்களில் என புரியாமல் அனைவரும் குழப்பமடைந்துள்ளனர்.
இன்று ரெய்டு நடத்தப்பட்டு வரும் தயாரிப்பாளர்களின் சினிமா வாழ்க்கை, அவர்கள் தயாரித்த மற்றும் விநியோகித்த படங்களின் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

அன்புச் செழியன்
மதுரையை சேர்ந்தவரான அன்புச்செழியன் கோபுரம் சினிமாஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். பல படங்களை விநியோகமும் செய்துள்ளார். நல்லவன், கிழக்கு சீமையிலே, விஐபி, ஆழவந்தான், காக்க காக்க, சச்சின், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், துப்பாக்கி, கபாலி, அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தாணு, தற்போது தனுஷின் நானே வருவேன், சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரி 2, லூசிஃபர், மரைக்காயர் உள்ளிட்ட பல படங்களை விநியோகம் செய்த தாணு, கடைசியாக பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை விநியோகம் செய்திருந்தார்.

எஸ்.ஆர்.பிரபு
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் எஸ்.ஆர்.பிரபு, Potential studios என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் நடிகர் சிவக்குமார், சூர்யா குடும்பத்திற்கு உறவினர் ஆவார். ட்ரீம் வாரியஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜோக்கர், காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசி, கைதி, சுல்தான், ஓ2, வட்டம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். Potential studios சார்பில் மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திலும் பார்ட்னராக இருந்து சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, பிரியாணி, அட்டக்கத்தி, கொம்பன், மெட்ராஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

ஞானவேல் ராஜா
ஸ்டூடியோ க்ரீன், Aadnah arts ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சில்லுன்னு ஒரு காதல், பருத்திவீரன், அலெக்ஸ் பாண்டியன், இறைவி, தானா சேர்ந்த கூட்டம், தேவராட்டம், நோட்டா, டெடி, தேள் உள்ளிட்ட பல படங்கைள தயாரித்துள்ளார். அதே போல் சகுனி, கும்கி, வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன், 36 வயதினிலே, உத்தம வில்லன், பாகுபலி உள்ளிட்ட பல படங்களை விநியோகம் செய்துள்ளார்.

லட்சுமண்
தயாரிப்பாளர், டைரக்டர், விநியோகஸ்தரான லட்சுமண் ரோமியோ ஜுலியட், போகன், பூமி ஆகிய 3 படங்களை மட்டும் இயக்கி உள்ளார். தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள இவர், எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூ உள்ளிட்ட படங்களை விநியோகமும் செய்துள்ளார்.

தியாகராஜன்
பிரபலமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவன பேனரில் பல படங்களை தயாரித்து, விநியோகம் செய்துள்ளார் தியாகராஜன். 1982 ம் ஆண்டு மூன்றாம் பிறை படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான தியாகராஜன் தமிழ் மட்டுமின்றி சத்யஜோதி என்ற கன்னட படத்தையும் தயாரித்துள்ளார். கிழக்கு வாசல், பகல் நிலவு, இதயம், தொடரி, விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். கோபுரம், ஆனந்தம், கல்யாணம், மாயா, சுமங்கலி, திருமகள் உள்ளிட்ட பல டிவி சீரியல்களையும் தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











