Just In
- 3 min ago
இது லவ் மேரேஜ் இல்லையாம்.. சிவகார்த்திகேயன் பட ஹீரோயினுக்கு நாளை திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து!
- 36 min ago
குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டாரா? குடியிருப்புவாசிகள் புகார்.. நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்!
- 13 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 13 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
Don't Miss!
- News
ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் கெத்தாக திருடிய கொள்ளையர்கள்.. கொத்தாக மாட்டவைத்த ஜிபிஎஸ் சிப்
- Lifestyle
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எதிர்பார்த்ததுதான்.. இப்பவாச்சும் சொன்னாரே.. வருத்தம்தான்..ரஜினி அறிவிப்பு.. பிரபலங்கள் ரியாக்ஷன்ஸ்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று கூறியிருப்பதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் இறுதியில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
உண்மை பேச என்றுமே தயங்கியதில்லை.. ஏன் இந்த முடிவை எடுத்தார்? இதுதான் ரஜினியின் முழு அறிக்கை!
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.

கட்சி தொடங்கப்போவதில்லை
மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும் படியும் கொரோனா தொற்று பரவும் சூழலை தடுத்துக்கொள்ளும்படியும் கூறியிருந்தனர். இந்நிலையில் உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வராமல்
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை தான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

எதிர்பார்த்ததுதான்..
ரஜினிக்காந்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட்டில், எதிர்பார்த்ததுதான்.. எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். அப்பவே சொல்லியிருந்தால் ஏராளமானவர்களின் வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை.. என கூறியுள்ளார்.

வருத்தம்தான்
நடிகை கஸ்தூரி தனது மற்றொரு பதிவில் எதிர்பார்த்தோம்.. பிரிடிக்ட் பண்ணினோம்.. இருப்பினும் டிஸ்அப்பாயிண்டட்.. ரஜினிகாந்த் நீண்ட அழுத்தம் இல்லா வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஆண்டவன் துணை உண்டு
நடிகரும் இயக்குநருமான ஆர்கே சுரேஷ், ரஜினியின் அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் நல்லவர்களுக்கு ஆண்டவன் துணை என்றும் உண்டு என்றும் பதிவிட்டுள்ளார்.

உடல் நலம்தான் முக்கியம்
நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சாக்ஷி அகர்வால், டேக் கேர் தலைவா.. மற்ற அனைத்தையும் விட உடல் நலம்தான் முக்கியம் என தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியின் அறிக்கையை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

அரசியலை விட அமைதி பெரியது
இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள் சார். அரசியலை விட அமைதி பெரியது.. மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கதம் கதம்..
அறம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகையும் கிரிக்கெட் வீராங்கனையுமான லக்ஷ்மி, கதம் கதம்.. டேக் கேர் தலைவா என பதிவிட்டுள்ளார்.