twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒப்பற்ற கலைஞனுக்கு மறைவில்லை... எப்போதும் அணையா விளக்கே.. எஸ்பிபியை நினைவுகூறும் பிரபலங்கள்!

    |

    சென்னை: பிரபல பின்னணி பாடகரான எஸ்பிபியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது தொற்றால் பாதிக்கப்பட்டார்.

    சாரீரமாக நம்மோடு உலவும் எஸ்பிபி... நெஞ்சைத் தொட்ட கமல் சாரீரமாக நம்மோடு உலவும் எஸ்பிபி... நெஞ்சைத் தொட்ட கமல்

    இதனை தொடர்ந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி சுமார் 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

    மிகப் பெரிய வெற்றிடம்

    மிகப் பெரிய வெற்றிடம்

    கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்பி பாலசுப்பிரமணியம், அதன் பின் விளைவுகளால் கடந்த ஆண்டு செப்டம் 25ஆம் தேதி காலமானார். திரையுலகில் பாடகராக மட்டுமின்றி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர் எஸ்பிபி. அவரது மறைவு திரையுலகில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நினைவு நாள் - பிரபலங்கள் மரியாதை

    நினைவு நாள் - பிரபலங்கள் மரியாதை

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என 16 மொழிகளில் 42000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ள எஸ்பிபி, உச்ச நடிகர்கள் பலருக்கும் குரலாய் வாழ்ந்துள்ளார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கமல்ஹாசன் முதல் குஷ்பு வரை பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளங்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    என்றும் அணையா விளக்கே

    என்றும் அணையா விளக்கே

    நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஒப்பற்ற கலைஞனுக்கு மறைவில்லை, அன்றாடம் மக்களின் வாழ்வில் அங்கமாகவும், உணர்வாகவும் ஒன்றியிருக்கும், எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் அவரின் பாடலுக்கேற்றவாறு, அணையா விளக்கே. அவருடன் பயணித்த தருணங்கள் என்றென்றும் மலரும் நினைவுகளாக மனதில் மலர்கின்றன.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    நம் இதயங்களில் எப்போதும்

    நம் இதயங்களில் எப்போதும்

    இதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலும் எஸ்பிபிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் ஒன்றை ஷேர் செய்துள்ள மோகன் லால், நம் இதயங்களில் என்றென்றும் மற்றும் எப்போதும் அவரது வானக் குரலால் இணையற்று இருப்பார். எஸ்பி பாலசுப்ரமணியம் சார் அவர்களின் முதல் நினைவு தினத்தை நினைவு கூர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மறக்கும் பெயரல்ல.. ஒலிக்கும் பெயர்

    மறக்கும் பெயரல்ல.. ஒலிக்கும் பெயர்

    இதேபோல் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சியும் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தை நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் அனைத்தையும் அன்பால் அணைத்துக் கொண்ட அற்புத மனிதரின் நினைவு நாள்... எஸ்பிபி என்பது மறக்கும் பெயரல்ல... ஒவ்வொரு நாளும் காதோரம் இனிமையாய் ஒலிக்கும் பெயர்... ஒலிக்கும் பிடித்த அக்கலைஞன் காற்றோடு கலந்து நம் மூச்சோடு என்றும் நிலைத்திருப்பார்.. என குறிப்பிட்டுள்ளார்.

    இசை வானத்தில் சங்கீத மேகமாய்

    இசை வானத்தில் சங்கீத மேகமாய்

    பாடலாசிரியர் அருண்பாரதி பதிவிட்டுள்ள ட்வீட்டில்,
    இசை வானத்தில்
    சங்கீத மேகமாய்
    மிதந்து கொண்டிருக்கும்
    உங்கள் குரல்....
    உலகம் முடியும் வரை
    கடைசி மனிதன் வாழும் வரை
    வந்து கொண்டே இருக்கும்
    வழித்துணையாய்.. என பதிவிட்டுள்ளார்.

    கண்ணீரில் விட்டு சென்று ஒரு வருஷம்

    கண்ணீரில் விட்டு சென்று ஒரு வருஷம்

    நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டில், நீங்கள் எங்களின் இதயத்தை நொறுக்கி, கண்ணீரில் விட்டு சென்று ஒரு வருடம் ஆகிறது. ஆனால் நாங்கள் சிரிப்பதற்கு மில்லியன் காரணங்களையும் நீங்கள் விட்டு சென்றிருக்கிறீர்கள். இந்த கிரகத்தில் இசை வாழும் வரை நீங்கள் வாழ்வீர்கள். உங்கள் குரல் எப்போதும் எங்கள் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கும். நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் பாலு சார். திரும்பி வாருங்கள் என்று சொல்ல விரும்புகிறேன்... என குறிப்பிட்டுள்ளார்.

    எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்

    எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்

    இதேபோல் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், எஸ்பிபி எப்போதும் என்றும் குரலால் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இன்னமும் உங்களை மிஸ் பண்ணுகிறோம் டியர் எஸ்பிபி என பதிவிட்டுள்ளார்.

    என் அன்னய்யா பாலு..

    என் அன்னய்யா பாலு..

    நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்வீட்டில் ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்... என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    English summary
    Cinema Celebrities remembering SPB on his first death Anniversary. Play back singer SPB passed away on September 25th last year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X