twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துண்டிக்கப்பட்டிருப்பது தொடர்பு மட்டும்தான்; நிலாவுமன்று.. எழுக நிலாவைத் தொடுக! வைரமுத்து ஆறுதல்!

    |

    Recommended Video

    கரம் கொடுத்த தெர்மல் இமேஜ்... விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்!

    சென்னை: விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து பிரபலங்கள் இஸ்ரோவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

    சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

    கடந்த 2-ந் தேதி ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றி வந்தது. நேற்று முன் தினம் குறைந்தபட்சமாக 35 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 101 கி.மீ. தொலைவிலும் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றி வந்தது.

    ஏற்பாடுகள்

    ஏற்பாடுகள்

    நேற்று அதிகாலை 1.54 மணிக்கு லேண்டரை நிலவில் மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். நிலவின் தென் துருவத்தில் தரை இறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    விஞ்ஞானிகள் அதிர்ச்சி

    விஞ்ஞானிகள் அதிர்ச்சி

    நிலவில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் இருந்த போது, லேண்டரை நிலவில் இறக்குவதற்கான சிக்னல் அதிகாலை 1.38 மணிக்கு, தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு மேலே 2.1 கி.மீ. உயரத்தில் வந்து கொண்டிருந்த போது லேண்டருடனான தரை கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.இதனால் விஞ்ஞானிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

    தேற்றிய மோடி

    தேற்றிய மோடி

    தொடர்பை ஏற்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டும் முடியாமல் போனதால், இஸ்ரோ தலைவர் சிவன், கண்ணீர்விட்டு அழுதார். அவரை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து தட்டிக்கொடுத்து சமாதானம் செய்தார். இந்த வீடியோ வைரலானது.

    ஆறுதல் பாராட்டு

    ஆறுதல் பாராட்டு

    இந்நிலையில் சோகத்தில் ஆழ்ந்துள்ள இஸ்ரோவுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் இஸ்ரோவின் பணியையும் அவர்கள் பாராட்டி டிவிட்டி வருகின்றனர்.

    எழுக நிலாவைத் தொடுக

    அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ள டிவிட்டில்,
    துண்டிக்கப் பட்டிருப்பது தொடர்பு மட்டும் தான்; நிலாவுமன்று. இஸ்ரோ.. எழுக நிலாவைத் தொடுக. என பதிவிட்டிருக்கிறார் வைரமுத்து.

    உங்களுடன் இருக்கிறோம்

    இதேபோல் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ள டிவிட்டில், நாங்கள் எல்லோருடம் உங்களுடன் இருக்கிறோம் இஸ்ரோ என பதிவிட்டுள்ளார்.

    வெகுதூரம் வந்துவிட்டோம்

    நடிகர் விவேக் பதிவிட்டுள்ள டிவிட்டில், 1979ஆம் ஆண்டு டாக்டர் அப்துல்கலாம் எஸ்எல்வி3யை சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பினார். அப்போதும் இதேதான் நடந்தது. அது சிதைந்து வங்கக்கடலில் விழுந்தது. நாம் தோல்விகளால் நிறுத்தவில்லை. நாம் பல சாதனைகளுடன் வெகுதூரம் வந்துவிட்டோம். இஸ்ரோவுக்கு துணை நிற்போம். பிரதமருடன் சேர்ந்து சிவன் குழுவினருக்கு ஆதரவை கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

    Read more about: isro இஸ்ரோ
    English summary
    Cinema celebreties supports ISRO for Chandrayaan 2
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X