»   »  'விஷால் முன்பு தீக்குளிப்பேன்' - ஸ்ட்ரைக்குக்கு எதிராக சினிமா பிரபலம் பகிரங்க மிரட்டல்!

'விஷால் முன்பு தீக்குளிப்பேன்' - ஸ்ட்ரைக்குக்கு எதிராக சினிமா பிரபலம் பகிரங்க மிரட்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷால் சினிமா ஸ்ட்ரைக்கிற்காக ரூ 10 லட்சம் நன்கொடை!

சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தினால் எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகாததோடு, படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கும் அதிக கட்டணத்தை குறைக்கவும், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது.

Cinema celebrity warns vishal team

தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் எப்போது முடியும் என்பதே தெரியவில்லை. இதனால் சினிமாவை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஸ்ட்ரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன், என பிரபல சினிமா பிரமுகர் கூறியிருப்பது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளரான தனபால் என்பவர் விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

"விஷால் செல்வமணி கூட்டணி சில தவறுகளைச் செய்து வருகிறார்கள். அவர்களால் தான் எங்களது தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியே இவர்கள் செய்து வந்தால் நான் விஷால் முன்பு கண்டிப்பாகத் தீக்குளிப்பேன். அப்படி இறந்தால் தான் எல்லோருக்கும் தெரிய வரும்" என்றும் கூறியிருக்கிறார்.

English summary
Producers council Strike is conducting to insist to reduce the digital services providers fee. In this situation, the famous cinema personality Dhanapal warns vishal on cinema strike issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X