Vadivelu: வடிவேலுவை கொல்ல திட்டம் போட்டாரா கேப்டன் விஜயகாந்த்?.. பிரபலம் என்ன இப்படி சொல்றாரு?

சென்னை: சினிமாவில் நண்பர்களாக இருந்தவர்கள் அரசியல் தளத்தில் எதிரிகளாக மாறியதற்கு தமிழ்நாட்டில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சினிமாவில் இணைந்தே செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா எதிரிகளாக மாறினார்கள். அதேபோல் சினிமாவில் இருந்தவரை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பொன்விழா நடத்தி, மிகவும் நெருக்கமாக இருந்த விஜயகாந்த், தான் அரசியலில் கால் பதித்த பின்னர், கலைஞரை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படி சினிமாவில் ஒன்றாக பணியாற்றி விட்டு, அதன் பின்னர் அரசியலில் மிகவும் நேர் எதிராக நின்று எதிரிகள் போல மாறிவிட்டவர்களில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் வடிவேலுவும் உள்ளார்கள்.

இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் வடிவேலு, நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்தை கடுமையாக சாடிப் பேசினார். குறிப்பாக, நீ என்ன கப்பலுக்கு கேப்டனா? கிரிக்கெட் டீமிற்கு கேப்டனா என்று எல்லாம் ஒருமையில் விமர்சித்தார். அந்த தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலுவை எதிர்த்து கேப்டன் விஜயகாந்த் ஒரு இடத்தில் கூட விமர்சித்துப் பேசவில்லை.

Cinema Journalist Anthanan Talks Gossip About Vijayakanth Plans To Kill Vadivelu
Photo Credit:

கேப்டன் - வடிவேலு: 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் அடுத்த 10 ஆண்டுகள் வடிவேலுவுக்கு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் மீண்டும் சினிமாவில் அதிகம் உலா வந்து கொண்டு இருக்கிறார். கேப்டன் மறைவுக்கு கூட வடிவேலு சென்று துக்கம் விசாரிக்காதது பலருக்கும் ஷாக் கொடுத்தது. இதனால் விஜயகாந்த் ரசிகர்கள் தொடங்கி, தொண்டர்கள், பொதுமக்கள், நெட்டிசன்ஸ் என பலரும் வடிவேலுவை கடுமையாக விமர்சித்தார்கள்.

வடிவேலுவைக் கொலை செய்ய திட்டமா?: இந்நிலையில் வலைபேச்சு அந்தணன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் அவர் கூறும்போது கூட, இப்படியான பேச்சு திரைத்துறை வட்டாரத்தில் இருக்கிறது என்று கூறிவிட்டுத்தான் வடிவேலு மற்றும் கேப்டன் விஜயகாந்த் குறித்த பேச்சையே தொடங்குகிறார். அதாவது, " நடிகர் வடிவேலுவை கொலை செய்ய கேப்டன் விஜயகாந்த் முடிவெடுத்து விட்டதாகவும், அதற்காக அவர் ரவுடி ஒருவரை நியமித்து விட்டதாகவும் வடிவேலுக்கு தகவல் சென்றுள்ளது. அதனால் உயிர் பயத்தில் இருந்த வடிவேலு, மதுரையில் உள்ள மு.க. அழகிரியை சந்தித்து திமுகவில் இணைத்துக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு தனது உயிர் மீது இருக்கும் பயத்தில் தான் திமுகவில் இணைந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது" என்று கூறுகிறார் அந்தணன்.

Cinema Journalist Anthanan Talks Gossip About Vijayakanth Plans To Kill Vadivelu
Photo Credit:

ரியாக்‌ஷன்: அந்தணன் இவ்வாறு கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு இணையவாசிகள் பலரும் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். கேப்டன் மீது அவப்பெயரை ஏற்படுத்த பலரும் கிளப்பிவிடும் அவதூறான கருத்துக்கள் என்றும் பதில் அளித்து வருகிறார்கள். ரசிகர்களோ, ஊருக்கெல்லாம் சோறு போட்ட மனுஷன் யாருடைய வயித்துலயும் அடிக்க மாட்டாரு" என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X