சினிமாவில் சான்ஸ் தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல தயாரிப்பாளர் கைது!

மும்பை: சினிமாவில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சினிமா ஆசையில் இளம் பெண்கள் முதல் திருமணம் ஆன பெண்கள் வரை பலரும் தங்களின் வாழ்க்கையை தொலைத்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

சினிமா வாய்ப்பு தருவதாக கூறும் பெண்களை ஏமாற்றும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சாந்திநகரில் பாலியல் தொழில்

சாந்திநகரில் பாலியல் தொழில்

அந்த வகையில் தயாரிப்பாளர் ஒருவர் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மிராரோடு, சாந்தி நகர் பகுதியில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கஸ்டமரை போல் சென்று

கஸ்டமரை போல் சென்று

இதையடுத்து போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் கஸ்டமரை போல் சென்று விசாரித்தார். அதில் திரைப்பட தயாரிப்பாளர் கன்யாலால் பால்சந்தானி மற்றும் அவரது உதவியாளர் வனிதா இங்கலே உள்ளிட்ட 3 பேர் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இளம் பெண்கள் மீட்பு

இளம் பெண்கள் மீட்பு

இதனை தொடர்ந்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி பாலியல் தொழில் நடத்திய அந்த 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஆசைக்காட்டி மோசம்

ஆசைக்காட்டி மோசம்

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தயாரிப்பாளர் கன்யாலால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசைக் காட்டி மோசம் செய்து பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X