For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டைம் மேனேஜ்மெண்ட தெரியாத சிம்பு... தவிக்கும் தயாரிப்பாளர்கள்

  |
  Producers Given complaint against Simbu

  சென்னை: நடிகர் சிம்புவை வைத்து படமெடுக்க முன்பணம் கொடுத்துவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

  ஒரு காலத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த சிம்புவுக்கு இது கடும் சோதனை காலம் போல. அண்டாவில் பாலபிஷேகம் பண்ண சொல்லி கேட்ட சிம்புவின் சினிமா வாழ்க்கைக்கு பால் ஊத்தும் விதமாக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்ததாக தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Cinema Producres ready to give complaints against Simbu

  இந்த புகார் மட்டும் உறுதியானால் சிம்பு செய்த பல கால தாமதங்கள் வெளிச்சத்துக்கு வரும். டயம் மேனேஜ்மென்ட் இல்லாத ஒரு மனிதன் எத்தினி பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதற்கு சிம்பு ஒரு உதாரணம்.

  தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் சிம்பு என்று இயக்குனர் சீமான் அறிவித்து 8 மாதம் கடந்த நிலையில் அவரை வைத்து படம் தயாரிக்கலாம் என்று தைரியமாக முடிவெடுத்த 5 தயாரிப்பாளர்கள் கோடிகளை கொட்டிக் கொடுத்து விட்டு தவித்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

  AAA படத்தின் முதலாவது பாகத்தில் 20 கோடி ரூபாயை இழந்த மைக்கேல் ராயப்பன், AAAவின் 2வது பாகத்திலாவது ஏதாவது தேரும் என்று காத்திருந்து நொந்து வெந்து போனது தான் மிச்சம். இதே போல பலரும் எச்சரித்த நிலையில் நாம எப்பவுமே உஷார் என்ற ரீதியில் சிம்புவிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கொடுத்த சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாவுக்கு சிம்பு காட்டிய படம் இன்னும் முடியவில்லை.

  இந்த அனுஷ்காவிடம் ஒரேயொரு பிரச்சனை தான்: பிரபாஸ்இந்த அனுஷ்காவிடம் ஒரேயொரு பிரச்சனை தான்: பிரபாஸ்

  சிம்பு நம்ம பையன் என்று அண்ணன் என்ற உரிமையோடு 2 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கொடுத்து வெங்கட்பிரபு கூட்டணியில் பக்காவா உருவாவதாக இருந்த மாநாடு அப்படியே கலைந்து போனது.

  சனி ஞாயிறு லீவு கேட்டு அடம் பிடிக்கும் ஒண்ணாங் கிளாஸ் பசங்கள போல சிம்பு பண்ணும் வம்புதான் காரணமாக சொல்லப்படுகின்றது. ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், யாருக்கோ போட்டியாக சிம்புவை மீண்டும் நிலை நிறுத்த அவசரப்பட்டு ஒரு கோடியை வாரிக் கொடுக்க, அன்னைக்கி தான் கடைசியா பார்த்தது.

  இதுவரைக்கும் போன் போட்டாலும் எடுப்பதே இல்லையாம். சிம்பு ஒரு தடவ கமிட் ஆயாச்சுனா அந்த படம் ரிலீஸ் ஆவது கடவுள் கையில் தான் இருக்கு. இவர்கள் எல்லாம் ஏமாந்து நடுத்தெருவில் நிற்பது தெரியாமல், கொரில்லா பட தயாரிப்பாளர் சிம்புவுக்கு 3 கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்துவிட்டு பரிதாபநிலையில் தள்ளப்பட்டுள்ளது கோடம்பாக்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  இவர்கள் அனைவரும் சிம்புவுக்கு எதிராக தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த ஆலோசனை குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சிம்பு தரப்பில் பேசி பார்த்ததாக சொல்லப்படுகிறது. தற்போது பாங்காக்கில் ஓய்வில் இருக்கும் சிம்பு தனது வீட்டில் இருந்து பதில் வரும் என சுட்டிக்காட்ட, வீடு தேடிச்சென்ற தயாரிப்பாளர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

  சிம்பு சொன்னதைப் போல, அவரது தந்தை டி.ராஜேந்தரை தொடர்பு கொண்டாலும் சிம்புவை போலவே அவரும் லைனில் வருவதே இல்லையாம். அவர் சிம்புவுக்காக அத்தி வரதரை சந்தித்தோடு சரி, பிறகு சைலன்ட் ஆகி விட்டார்.

  இதையடுத்து வட்டிக்கு பணம் வாங்கி சிம்புவிடம் கொடுத்துவிட்டு படம் தொடங்காமல் வட்டி கட்டி நொந்து போன தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் சிம்பு மீது பணம் மோசடி புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல் துறை அல்லது தயாரிப்பாளர் சங்கம் யார் என்ன முடிவு எடுத்தாலும் சிம்பு வாய் திறந்து பேசினால் தான் உண்மை புரியும்.

  இதே நிலை தொடர்ந்தால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல், சிம்புவுக்கு பணம் கொடுத்து ஏமாந்தோர் சங்கம் என புதிதாக ஒரு சங்கம் ஆரம்பித்து விடுவார்கள் போல் நிலைமை மோசமடைந்து வருகிறது.

  English summary
  Cinema sources say that all the producers who give the actor the opportunity to shoot the film with actor Simbu are going to file a complaint with the Chennai Police Commissioner.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X