»   »  ஆகஸ்ட் 26-ல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து..! - ஏன்?

ஆகஸ்ட் 26-ல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து..! - ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 26-ம் தேதி தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா சென்னையில் பிரம்மாண்டமாகக் கொண்டப்பட இருக்கிறது.

Cinema shooting cancelled all across tamilnadu

இந்நிகிழ்ச்சியை முன்னிட்டு அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புகளை ரத்து செய்யுமாறும் சண்டைக் கலைஞர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குக் கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 26-ம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை வரிகள் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமா படப்பிடிப்புகள் ரத்துசெய்யப்பட்டன. அதன்பிறகு, பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் மோதல் காரணமாகவும், டெக்னீஷியன் யூனியன் விவகாரம் காரணமாகவும் பல திரைப்படங்களின் ஷூட்டிங் ரத்துசெய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Cinema shooting cancelled across tamilnadu due to South Indian Cine & T.V Union Directors, Stunt Artistes Union's golden jubilee function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil