»   »  புதுப் படங்கள் வெளியாகாத இன்னொரு வெள்ளிக்கிழமை!

புதுப் படங்கள் வெளியாகாத இன்னொரு வெள்ளிக்கிழமை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும் சினிமா ஸ்ட்ரைக்

திரையுலக ஸ்ட்ரைக் ஆரம்பித்து இன்று 36வது நாள். இந்த 36 நாட்களும் தமிழ் சினிமாவில் எந்தப் படமும் புதிய படங்களும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான சீசன் இது. கோடைக் காலம். எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் நகரம், கிராமம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் மக்கள் பார்த்துவிடுவார்கள். ஆனால் இந்த கோடை காலம் முழுக்க தியேட்டர்கள் வெறிச்சோடிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Cinema strike enters 36th day

சில ஆங்கிலப் படங்கள்தான் இந்த ஒரு மாதத்தில் புதிதாக வெளியாகின. இரண்டு தெலுங்குப் படங்கள் வந்தன. இனி ஸ்ட்ரைக் முடியும் வரை தெலுங்குப் படங்களும் ரிலீஸ் ஆகாது என்று சொல்லிவிட்டனர்.

எனவே பழைய எம்ஜிஆர், ரஜினி படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு வருகின்றனர். கிராமப்பகுதி அரங்குகளில் பழைய விஜய் படங்கள், அஜித்தின் பில்லா போன்ற படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் சினிமா வரலாற்றில் இத்தனை நாட்கள் தொடர்ந்தார்போல புதுப் படங்கள் வெளியிடாமல் இருப்பது இதுவே முதல் முறை.

English summary
For the past 36 days there was no new movie release in Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X