twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அந்த 1000 கோடிக்கு கணக்கு காட்டுங்க!' - டிஜிட்டல் நிறுவனங்களைக் கேட்கும் புரோட்யூசர்ஸ்!

    By Shankar
    |

    Recommended Video

    ரஜினிக்கு நண்பன் விஷாலுக்கு எதிரியான தியேட்டர் சங்க நிர்வாகிகள்- வீடியோ

    தமிழ் சினிமாவில் கடந்த 30 நாட்களாக டிஜிட்டல் சினிமா பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பாளர்கள் - தியேட்டர் உரிமையாளர்கள் - டிஜிட்டல் நிறுவனங்கள் இடையே மோதல் போக்கு முடிவுக்கு வராமல் தொடர்கதையாகி தமிழ் சினிமா வர்த்தகத்தை, தயாரிப்பை முடக்கிப் போட்டுள்ளது.

    இந்த நிலையில் தத்தமது நிலைபாட்டை நியாயப்படுத்தி ஆடியோ, வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கியூப் நிறுவனம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

    அதில் உலகிலேயே தமிழகத்தில்தான் இ-சினிமா கட்டணம் குறைவாக இருக்கிறது. நிறைய வசதிகளை தயாரிப்பாளர்களுக்கு இலவசமாகவே நாங்கள் செய்திருக்கிறோம். தயாரிப்பாளர்கள் தேவையற்று புலம்புகிறார்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இதற்கு தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் துரைராஜ் கடுமையாக தனது கண்டணத்தை தெரிவித்திருக்கிறார்.

    "டிஜிட்டல் சினிமா வருகைக்கு பின்தான் தமிழ் சினிமா சீரழிவைச் சந்தித்துள்ளது கடந்த 12 வருடங்களில் சினிமா தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் கம்பெனிகளுக்கு 600 கோடி ரூபாய் கட்டணமாகச் செலுத்தி இருக்கிறோம்.

    எங்கள் படங்களைத் திரையிடும் முன் விளம்பரங்கள் வெளியிட்ட வகையில் 400 கோடி ரூபாய் வருவாய் உங்களுக்கு கிடைத்து உள்ளது. எங்கள் மூலம் 1000ம் கோடி சம்பாதித்து உள்ள நீங்கள் நேர்மையாக இவற்றுக்கு கணக்கு கூறுங்கள்," என கேள்வி எழுப்பியுள்ளார்.

    கார்ப்பரேட் பாணியில் புத்திசாலித்தனமாக விவாதம் செய்வதையும், விளக்கம் சொல்வதையும் விட்டுவிட்டு யதார்த்தத்துக்கு வாருங்கள் பிரச்சினையை பேசித் தீர்க்கலாம் என்கிறார் துரைராஜ்.

    "2005ல் டிஜிட்டல் அறிமுகமானபோது தயாரிப்பாளர்களுக்கு ரிலீஸ் செலவு குறைந்தது உண்மை தான். அன்றைக்கு சினிமா உலகம் ஆரோக்கியமாக, வளமாக இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை. எங்களுக்கு இலவசமாக எதுவும் தேவை இல்லை.

    நீங்கள் எங்களுக்கு செய்த சேவைக்கு அதிகமாகவே கட்டணம் செலுத்தியிருக்கிறோம். பத்து லட்ச ரூபாய் செலவில் இரு முறை புரஜெக்டரை நிறுவியிருக்கிறீர்கள். இதற்கு பாராமரிப்பு கட்டணமாக கியூப் நிறுவனத்திற்கு பல லட்சங்களை தியேட்டர் உரிமையாளர்கள் கட்டியிருக்கிறார்கள்.

    படங்களை திரையிட வாரந்தோறும் சுமார் 9000ம் முதல் 12000ம் ரூபாய் வரை ஒவ்வொரு தியேட்டருக்கும் பணம் செலுத்தியது எங்கள் தயாரிப்பாளர்களே," என்று கூறும் துரைராஜ்
    வருடத்துக்கு தமிழ்நாட்டில், உள்ள 1100 தியேட்டர்களிலிருந்தும் 12 வருடங்களில் சுமார் 600 கோடி பணத்தை டிஜிட்டல் (12000 x 52 x 1100) நிறுவனங்கள் வருவாயாகப் பெற்றுள்ளன என்கிறார்.

    விளம்பரம் திரையிடல் மூலம் 400 கோடி, ஆக 1000 கோடியை எங்கள் மூலம் சம்பாதித்த டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவது அநியாயம், தர்மத்துக்கு புறம்பானது," என்கிறார்.

    பிரிண்ட் காலத்தில் 120 தியேட்டர்களில் பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருடக்கணக்கில் ஓடின. எஞ்சிய தியேட்டர்களில் பட்ஜெட் படங்கள் ரீலீஸ் செய்ய வாய்ப்பு இருந்தது. பொதுமக்கள் தங்களுக்கு பணம் கிடைத்தபோது தியேட்டருக்கு வந்து படம் பார்த்தனர்.

    டிஜிட்டல் முறை வந்த பின் பெரிய நடிகர்களின் படங்கள் 300 முதல் 500 திரைகளில் திரையிட்டு ஒரு வார காலத்தில் படங்கள் ஆயுள் முடிந்து விடுகிறது. நல்ல படங்களை காசு கிடைக்கிற போது தியேட்டருக்கு வந்து பார்க்கும் வாய்ப்பு ஏழைகளுக்கு கிடைக்காமலே போகிறது.

    பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் முடங்கி போகின்றன. டிஜிட்டல் வருகையால் முதலில் செலவு குறைந்தாலும், சினிமா சீரழிந்து சிக்கலை சந்தித்திருக்கிறது என்பதை மறுக்க முடியாதது என்பது திரையுகினர் வாதம்.

    என்ன செய்யப் போகின்றன டிஜிட்டல் நிறுவனங்கள்?

    English summary
    Tamil cinema industry has raised many questions against Digital service providers and asking details for Rs 1000 cr earned from them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X