»   »  சினிமா பிரச்சினைக்கு அடுத்த 3 நாட்களி்ல் தீர்வு! - விஷால்

சினிமா பிரச்சினைக்கு அடுத்த 3 நாட்களி்ல் தீர்வு! - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஸ்ட்ரைக்கை பற்றி!- வீடியோ

சினிமா பிரச்சினைக்கு இன்னும் 3 நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியுள்ளார்.

தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடும் கியூப், யுஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்கள் திரைக்கு வராததால் 29 நாட்களாக பட உலகம் முடங்கி உள்ளது.

Cinema Strike will come to end in 3 days, says Vishal

சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டனர். தியேட்டர்களில் பழைய படங்களை மீண்டும் திரையிட்டு வருகிறார்கள். கூட்டம் இல்லாததால் வசூல் பாதித்துள்ளது. இந்த மாதம் வெளியாக வேண்டிய 20-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. அடுத்த மாதம் வெளியீட்டுக்காக 30 படங்கள் தணிக்கைக்கு காத்திருக்கின்றன.

வேலை நிறுத்தம் காரணமாக திரையுலகுக்கு இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

போராட்டம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கூறுகையில், "திரைப்பட சங்கத்தினர் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் எதற்காக போராட்டம் நடக்கிறது என்பதை தியேட்டர் உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் உணர்ந்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்பு வந்துள்ளது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பிரச்சினைக்கு இறுதியான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்," என்றார்.

English summary
Actor Vishal says that the cinema industry strike will come to an end with few days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X