»   »  இட்லி திருடியவர் குற்றவாளி என்றால், திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர் யார்?

இட்லி திருடியவர் குற்றவாளி என்றால், திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர் யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிக்கெட் விலை மோடியின் தயவால், தமிழக அரசின் மவுன விரதத்தால் கூடியிருக்கிறது. மோடி எப்படி எல்லா துறையிலும் குதறியிருக்கிறாரோ அதேபோல் சினிமா துறையையும் குதறியிருக்கிறார்.

இட்லி விலை கூட கூடியிருக்கிறது. ஆனால் யாருமே 'இனி நான் இட்லியை திருடித்தான் தின்பேன்' என ஸ்டேடஸ் போடவில்லை. ஆனால், 'இனி திருட்டு டிவிடியில்தான் படம் பார்ப்பேன்' என்ற ஸ்டேடஸ்கள் நிறைய தென்படுகின்றன.

Cinema Ticket price increase and piracy

இட்லி திருடுவதில் இருக்கும் கூச்சம் ஏன் 1000 தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை திருடுவதில் இல்லை. கண்ணுக்கு தெரியும் திடப் பொருட்களை திருடுவதில் இருக்கும் குற்ற உணர்ச்சி கலைப்படைப்பை திருவதில் இல்லை அல்லவா!

ஆனால் அதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அடுத்தமுறை அரசியல்வாதிகளின் ஊழல்களைப் பற்றியெல்லாம் பேசும்போது நீங்கள் எத்தனை முறை திருடியிருக்கிறீர்கள் என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.

- டான் அசோக்

English summary
Why people do not feel guilty for watching movies in piracy video but feel guilty in stealing solid objects

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil