»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தால் கன்னடத் திரையுலகம் ஸ்தம்பித்துள்ளது.

அவர் விடுவிக்கப்படும்வரை மாநிலத்தில் உள்ள 1200 தியேட்டர்களும் இயங்காது. மேலும் திரைப்பட டிவி படத் தயாரிப்புகள் அனைத்தையும் நிறுத்திவைக்க கன்னடத் தயாரிப்பாளர்கள் மற்றும் கன்னட திரைப்பட வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கன்னட திரைப்பட வர்த்தக சங்க செயலாளர் மாருதி கூறியதாவது:

நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்படும் வரை கன்னட திரைப்பட தயாரிப்புப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவர் கடத்தப்பட்டதை அறிந்த கன்னடத் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவரது ரசிகர்கள் அனைவரும் கடும் வேதனையடைந்துள்ளனர். திங்கள்கிழமை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

படத்தயாரிப்புக்கள், படப்பிடிப்புகள், டிவி தொடர் தயாரிப்புக்கள், எடிட்டிங், பாடல்பதிவு உள்பட அனைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 10 முதல் 15 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராஜ்குமார் மீண்டும் நலமாக திரும்ப வேண்டுமென்பதற்காக பல கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடந்து வருகின்றன.

Read more about: cinema, rajkumar, release, theatre, work

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil