For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சினிமாத்தனமான காதல்.. கணவன் மனைவி நெருக்கம்.. காலங்களில் அவள் வசந்தம் ஹிரோஷினி எக்ஸ்க்ளூசிவ்!

  |

  சென்னை: அறம் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிப்பில் ராகவ் மிர்தத் இயக்கத்தில் நடிகை அஞ்சலிநாயர், அறிமுக நடிகர் கௌசிக் ராம், நடிகை ஹிரோஷினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலங்களில் அவள் வசந்தம்.

  இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

  இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகை ஹிரோஷினி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

  கீர்த்தி சுரேஷா? சமந்தாவா? ’அறம் 2’வில் யார் ஹீரோயின்.. இயக்குநர் கோபி நயினார் விளக்கம்!கீர்த்தி சுரேஷா? சமந்தாவா? ’அறம் 2’வில் யார் ஹீரோயின்.. இயக்குநர் கோபி நயினார் விளக்கம்!

  முக்கோண காதல் கதை

  முக்கோண காதல் கதை

  கேள்வி: படத்தில் உங்கள் கதாபாத்திரம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: படத்தில் கதாநாயகன் ஷ்யாமின் காதலியாக அனு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கொஞ்சம் சினிமாத்தனமானது. சினிமாவில் வருகின்ற மாதிரி காதல் செய்ய விரும்பும் கதாபாத்திரம். இது ஒரு முக்கோண காதல் கதையாக இருந்தாலும், என்னுடைய கதாபாத்திரம் கொஞ்சம் நேரம் வந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்து காணப்படும் என்றார்.

  சவாலான காட்சிகள்

  சவாலான காட்சிகள்

  கேள்வி: படத்தில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் என்ன?

  பதில்:படத்தில் அம்மா கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை ஜெயா சுவாமிநாதனும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அப்பா கதாபாத்திரமும் மிகவும் அருமையானது. தன் மகன் சிறந்தவன் என்று கூறும் அம்மா, நம்முடைய நிஜவாழ்க்கையிலும் இருந்தால் நல்லா இருக்கும் என்றார். ஜெயா சுவாமிநாதனும் தனக்கு இந்த கதாபாத்திரம் பிடித்ததாக என்னிடம் கூறினார்.

  கேள்வி: நீங்கள் நடிப்பதற்கு சிரமமாக இருந்த காட்சிகள் படத்தில் எது?

  பதில்: மழைக் காட்சிகள் கொஞ்சம் சவாலாக தான் இருந்தது. மிக வேகமான மழையில் கண்களை சிமிட்டாமல் வசனங்கள் பேசுவதும், வசனத்தை நினைவில் வைத்துக் கொள்வதும் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் நான் அதை சிறப்பாக செய்திருக்கிறேன். நிறைய ஸ்லோ, மிட், க்ளோசப் ஷாட் என எல்லா விஷயமும் இருந்தது. மழை தொடர்பான காட்சி முடிந்தபிறகு, மற்றொரு காட்சியும் அன்றே படமாக்கப்பட்டது என்றார்.

  சினிமாத்தனம்

  சினிமாத்தனம்

  கேள்வி: படத்தில் உங்களுடைய கதாநாயகனுடனான நெருக்கமான காட்சிகள் உங்களுக்கு குறைவாக இருந்தது குறித்து...

  பதில்: கதைப்படி நான் காதலி. ராதை மனைவி. காதலியுடன் எந்த அளவில் நெருக்கம் இருக்குமோ அந்த அளவிற்கு தான் நெருக்கமான காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஷ்யாமும் அனுவும் கொஞ்சம் சினிமாத்தனம் வாழ்க்கை வாழ விரும்புபவர்கள். எனவே அவர்களுக்கிடையே காட்சிகள் சினிமாத்தனமாக இருக்கும். ராதைக்கும் ஷ்யாமுக்கும் உள்ள நெருக்கமான காட்சிகள் ஒரு கணவன் மனைவிக்குள் எவ்வளவு நெருக்கம் இருக்குமோ அந்தளவு காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது என்றார்.

  விடாமுயற்சி தேவை

  விடாமுயற்சி தேவை

  கேள்வி: உங்களுக்கு பிடித்த நிறம் எது?

  பதில்: எனக்கு பொதுவாக கிரே கலர் பிடிக்கும். மேலும் படத்தில் 'நான் உன் பப்பாளி இல்லையா' என்று கதாநாயகன் என்னிடம் பேசும் வசனம் ரொம்ப பிடிக்கும். படத்தில் பப்பாளி பாடல் அருமையாக வந்துள்ளது என்றார்.

  கேள்வி: இளம் தலைமுறையினர் சினிமாவிற்கு வருவது குறித்து...

  பதில்: இப்பொழுது வாய்ப்புகள் நிறைய இருப்பது போல் போட்டிகளும் இந்த துறையில் நிறைய உள்ளது. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மற்ற துறைகளில் இல்லாத சிறப்பு என்னவென்றால், நீங்கள் விரும்பியவண்ணம் செயல்படலாம். துணிவும், விடாமுயற்சியும் இருந்தால் சினிமாத்துறையில் யாவரும் சாதிக்கலாம் என்று ஹிரோஷினி கூறியுள்ளார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/KCf5AaS1N8E இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Produced by Aram Entertainment and directed by Raghav Mirdhat, Kaalangalil Aval Vasantham Movie starring actress Anjali Nair, debutant Kaushik Ram and actress Hiroshini in leading roles. The film has been released in theaters and is receiving good response from the audience. In this case, the actress Hiroshini, who has acted in the film, gave a special interview to our filmibeat channel.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X