»   »  அமைதியாக நடந்து முடிந்த ஒளிப்பதிவாளர்களுக்கான சிகா தேர்தல்

அமைதியாக நடந்து முடிந்த ஒளிப்பதிவாளர்களுக்கான சிகா தேர்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒளிப்பதிவாளர்களுக்கான சிகா தேர்தல் இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் இன்று இரவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி', பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலைஅணி', கே.வி.கன்னியப்பன் தலைமையில் 'ஆண்டவர்அணி' என்று 3 அணிகள் போட்டியிடுகின்றன.

ஒளிப்பதிவாளர் சங்கத்தின் மொத்த உறுப்பினர்கள் 1200. இதில் ஆந்திராவில் 120 பேர், கர்நாடகாவில் 60 பேர், கேரளாவில் 40 பேர் உள்ளனர்.

Cinematographer Association election Election Ends

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி சற்று முன் 4 மணியுடன் நடந்து முடிந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று இரவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிகாவில் மொத்தம் 1300 பேர் இருந்தாலும், அதில் 913 பேர் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவரான என்.கே. விஸ்வநாதன் மற்றும் செயலாளர் ஃபெப்சி சிவா ஆகியோர் மீது, ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சிகா தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

3 அணிகளில் வெற்றிவாகை சூடப்போவது எந்த அணி? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.

English summary
South Indian Cinematographer Association election will be held in Chennai on Sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil