»   »  சாமி, சிங்கம், வேலாயுதம் பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி

சாமி, சிங்கம், வேலாயுதம் பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன்(53). இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக தனது சினிமா வாழ்க்கையை துவங்கியவர். சென்னையில் வசித்து வந்த ப்ரியன் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார்.

Cinematographer Priyan no more

அவரின் மரண செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். சாமி, சிங்கம், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுள்ளார்.

தற்போது அவர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாமி 2 படத்தில் வேலை பார்த்து வந்தார். கடுமையான உழைப்பாளியான ப்ரியன் திரையுலக பிரபலங்களின் மனதை வென்றவர்.

அதற்குள் சென்றுவிட்டீர்களே என்று பிரபலங்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

English summary
Popular cinematographer Priyan passed away in Chennai on thursday of cardiac arrest. He was 53.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil